Rakul Preet Singh: அந்த மகேஷ் பாபு படம் என்னோட மிகப்பெரிய ஃபெயிலியர்.. ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்!

ஹைதராபாத்: தமிழில் கடைசியாக அயலான், இந்தியன் 2 என தொடர் தோல்விகளை தழுவிய நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் இந்தியில் அஜய் தேவ்கன் உடன் இணைந்து நடித்த படத்தின் மூலம் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை ருசித்துள்ளார். அஜய் தேவ்கன் திருமணமான ரகுல் ப்ரீத் சிங்கின் மார்பகத்தில் முகத்தை வைத்து நடனமாடுகிறாரே என பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்ட அந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி வாகை சூடியுள்ளது.

சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு வெற்றிப் படங்களை விட தோல்விப் படங்களே பல வாழ்க்கைப் பாடங்களை கொடுக்கும். அந்த வகையில், தன்னுடைய வாழ்விலே மறக்க முடியாத தோல்வி படம் என்றால் அது மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்த ஸ்பைடர் படம் தான் என ஓபனாகவே சமீபத்தில் அளித்த பேட்டியில் போட்டு உடைத்து விட்டார்.

Mahesh Babu s Spyder movie was my biggest failure says Rakul Preet Singh
Photo Credit:

ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடித்து வரும் பிரமாண்டமான 'வாரணாசி' படம் உருவாகி வரும் சூழலில் ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த பேட்டி மகேஷ் பாபு ரசிகர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்பைடர் மிகப்பெரிய தோல்வி: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான ஸ்பைடர் திரைப்படம் தான் தன்னுடைய வாழ்நாளிலேயே மிகப்பெரிய முதல் தோல்விப் படம் என நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார். அஜய் தேவ்கன் உடன் அவர் நடித்த De De Pyaar De 2 திரைப்படம் சமீபத்தில், 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வேட்டை நடத்திய உற்சாகத்தில் பேட்டியளித்த ரகுல் ப்ரீத் சிங் மகேஷ் பாபுவுடன் நடித்த படம் மிகப்பெரிய தோல்விப் படமாக மாறியதை கூறியுள்ளார்.

Mahesh Babu s Spyder movie was my biggest failure says Rakul Preet Singh
Photo Credit:

மகேஷ் பாபு, ஏ.ஆர். முருகதாஸ் படம்னு பெருசா நினைச்சேன்: கஜினி, துப்பாக்கி என ஹிட் கொடுத்த ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறோமே என வாய்ப்பு வந்து சைன் பண்ணும் போது ரொம்பவே பெருசா நினைச்சேன். ஆனால், அந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது எனக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தது என்றார். அதற்கு முன்பாக ராம்சரண், ஜூனியர் என்டிஆர் என டோலிவுட்டில் வரிசையாக 8 ஹிட் படங்களை கொடுத்த நிலையில், கிடைத்த பெரிய வாய்ப்பு கடைசியில் ஃப்ளாப் ஆகி விட்டது. சினிமாவில், வெற்றி மற்றும் தோல்வி ஒரு அங்கமாக உள்ளது என்பதை அப்போதுதான் புரிந்துக் கொண்டேன் எனக் கூறியுள்ளார். தமிழில் கடைசியாக இவர் நடித்த அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் ஃப்ளாப் ஆன நிலையில், தொடர்ந்து தற்போது இந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

மகேஷ் பாபு ரசிகர்கள் கடுப்பு: கடந்த சில ஆண்டுகளாகவே மகேஷ் பாபு நடித்து வரும் தெலுங்கு படங்கள் ஃப்ளாப் ஆகி வரும் சூழலில் ராஜமெளலி இயக்கத்தில் அவர் பிரமாண்டமான வாரணாசி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மகேஷ் பாபு படத்தை மட்டும் குறிப்பிட்டு ரகுல் ப்ரீத் சிங் பேசியதற்கு மகேஷ் பாபு ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X