'மகேஷ், சந்தியா மற்றும் சிலர்'...

கூல் புரடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான பிடிச்சிருக்கு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அடுத்த படமாக மகேஷ், சந்தியா மற்றும் சிலர் என்ற படத்தைத் தொடங்கியுள்ளனர். இப்படத்தில் இயக்குநர் பி.வாசுவின் மகனும், தொட்டால் பூ மலரும் பட நாயகனுமான ஷக்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சந்தியா நடிக்கவுள்ளார்.
ஷக்தியின் முதல் படம் பெரிய அளவில் ஓடவில்லை. அதேபோல சந்தியா நடித்த சமீப காலப்படங்கள் சரியாக போகவில்லை. இந்த நிலையில் இருவருக்குமே இந்தப் புதிய படம் பெரும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
இது சுத்தமான அக்மார்க் காதல் கதையாம். வித்யாசாகர் இசையமைக்கவுள்ளார். படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











