மியாவ் மியாவ் பூனை... பூனைக்கு நெருங்கிய தோழியான பிரபல தமிழ் நடிகை!
சென்னை : தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை மஹிமா நம்பியார்.
தமிழில் கடைசியாக ஆர்யாவுடன் இணைந்து மகாமுனி திரைப்படத்தில் நடித்திருந்தார் .இதில் ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.
இந்தநிலையில் வீட்டில் செல்லமாக வளர்க்கும் பூனையுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாய்ப்புகளும் தொடர்ந்து
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக உள்ள மஹிமா நம்பியார் சாட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர். சமுத்திரக்கனி ஆசிரியராக நடித்திருக்கும் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. மேலும் மஹிமாவுக்கு இந்த படம் மிகப்பெரிய அறிமுகத்தையும் கொடுத்தது பல வாய்ப்புகளும் தொடர்ந்து வந்தது.

இரவுக்கு ஆயிரம் கண்கள்
தமிழைப் போலவே மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் மஹிமா நம்பியார் காரியஸ்தன், மாஸ்டர்பீஸ்,மதுர ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சாட்டைக்கு பிறகு என்னமோ நடக்குது, மொசக்குட்டி ,குற்றம் 23 ,அகத்திணை, புரியாத புதர் ,அண்ணாதுரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், கொடிவீரன் மற்றும் அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பத்மகுமார் இயக்கத்தில்
கடைசியாக ஆர்யாவின் நடிப்பில் வெளியான மகாமுனியில் சமூகப் போராளி பெண்ணாக நடித்திருந்த இவருக்கு அதன்பிறகு தமிழில் எந்த ஒரு வாய்ப்புகளும் அமையவில்லை. தற்போது மலையாளத்தில் இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில் ஆசிப் அலி நடிக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Recommended Video

சீக்கிரம் வளர்ந்து விடாதே
லாக் டவுனில் படப்பிடிப்பு இல்லாததால் சமூக வலைத்தளங்களில் சில க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வந்து மஹிமா இப்பொழுது வீட்டில் வளர்க்கும் செல்ல பூனைக்கு நெருங்கிய தோழி ஆனதுடன் கொஞ்சி விளையாடி சீக்கிரம் வளர்ந்து விடாதே என கேட்டுக்கொண்டும் உள்ள க்யூட்டான புகைப்படங்களை தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











