Don't Miss!
- News
ஞானவாபி மசூதி விவகாரம்.. நீதிமன்றம் சென்ற முஸ்லீம் அமைப்பினர்! இன்று வாரணாசி கோர்டில் விசாரணை
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Finance
இன்று தங்கம் விலை எப்படியிருக்கு.. கூடிருக்கா.. குறைஞ்சிருக்கா..!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லாக்டவுனில் என்ன செய்தேன் தெரியுமா...மாநாடு ஸ்டையிலில் மகிமா போட்ட சூப்பர் போஸ்ட்
சென்னை : மலையாளம் மற்றும் தமிழ் மொழி சினிமாவில் பிரபலமாக இருக்கும் மகிமா நம்பியார், தமிழில் சாட்டை படத்தை மூலம் அறிமுகமானார். தொடர்ந்து என்னமோ நடக்குது, அகத்தினை, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், அண்ணாதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக மகிமா நடித்த மகாமுனி, அசுரகுரு போன்ற படங்கள் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தன. தற்போது தமிழில் ஐங்கரன் மற்றும் ஓ மை கடவுளே படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
மோசடி மன்னனுடன் நெருக்கமான போட்டோ...ஜாக்குலின் என்ன சொல்லிருக்கார் பாருங்க

குண்டுமல்லி மியூசிக் வீடியோ
படங்களுடன் மியூசிக் வீடியோக்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் சாந்தனு பாக்யராஜுடன் இணைந்து குண்டுமல்லி என்ற மியூசிக் வீடியோவில் இவர் நடித்திருந்தார். ஒரு திருமண வைபவத்தை மிக அழகாக காட்டி இந்த மியூசிக் வீடியோ அமைக்கப்பட்டிருந்தது. இது அனைவரையும் மிகவும் கவர்ந்தது.

அழகில் மயக்கும் மகிமா
தத்ரூபமான திருமண வைபவம், கலர்புல்லான வீடியோ, அழகான இசையை விட மகிமாவின் சொக்க வைக்கும் அழகு தான் இந்த வீடியோவிற்கே ஹைலைட்டாக அமைந்தது. சாந்தனு, மகிமா இடையேயான க்யூட்டான ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை மிகவும் கவர்ந்தது. இந்த வீடியோ யூட்யூப்பில் 3 மில்லியன் பார்வைகளை கடந்தது.

பீச்சில் சில் பண்ணும் மகிமா
இந்நிலையில், லாக்டவுனில் தான் என்ன செய்தேன் என்பதை போட்டோவாக வெளியிட்டுள்ளார் மகிமா நம்பியார். கடற்கரையில் கிளாமர் உடையில் கூலாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தியுள்ள மகிமா, அதோடு மாநாடு ஸ்டைலில் கேப்ஷன் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த கேப்ஷன் தான் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

மாநாடு ஸ்டைலில் போஸ்ட்
மகிமா தனது இன்ஸ்டா பதிவில், சாப்பிட...தூங்க...பீச்சு...ரிப்பீட்டு...சாப்பிட...தூங்க...பீச்சு...ரிப்பீட்டு என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் மற்றும் கேப்ஷனை பார்த்து விட்டு, ரெட் ஹார்ட்களால் கமெண்ட் பகுதியை நிரப்பி உள்ளனர். நீங்க செம க்யூட், ட்ரீம் குயின் , Pretty குயின் , வெரி ப்யூட்டிஃபுல் என ஜொள்ளு விட்டு வர்ணித்து வருகிறார்கள்.