அழகா வெட்கப்பட்டு சிரிக்கும் மஹிமா நம்பியார்.. லேட்டஸ்ட் புகைப்படம் !
சென்னை : நடிகை மஹிமா தனது வீட்டில் இருந்த படியே மிகவும் அழகான புது போட்டோசூட் எடுத்துள்ளார்.
Recommended Video
இந்த புகைப்படங்கள் அனைத்திலும் வெள்ளை டிசர்ட், கருப்பு பேன்ட் மற்றும் வெள்ளை ஷு என்று மிகவும் ஸ்டைலிஷான ஆடையுடன் மிகவும் நேர்த்தியாக போட்டோசூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்திலும் மஹிமா வெட்கபட்டு சிரிப்பதை மிக அழகான பதிவுகளாய் எடுத்து பதிவேற்றியிருக்கிறார் .

இந்த புகைப்படங்களை பதிவேற்றி சிரிப்பு உனக்கு மிகவும் எடுப்பாக இருக்கிறது என்று மற்றொருவரை கூறுவது போல தன்னை தானே கூறி பதிவேற்றயிருக்கிறார்.
மஹிமாவின் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வழக்கம் போல தங்கள் முத்தங்களையும் இதையங்களையும் கொடுத்து வருகின்றனர். சில ரசிகர்கள் எங்கள் நாள் இன்று மிகவும் அருமையாக அமையவுள்ளது ஏனெனில் உங்கள் அழகான முகத்தை காணும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று கவிதை எழுதி மேலும் மஹிமாவை வெட்கப்பட வைத்து வருகின்றனர் .
மஹிமாவின் சின்னஞ்சிறு மெலுகு போன்ற சிரிப்புக்கு மயங்கி போன ரசிகர்கள் ஏங்க கொரன்டைன் நேரத்தில் எங்களை வந்து அழகால கொல்றீங்க என்று பாசமாக கோவப்பட்டு வருகின்றனர் .
கொரன்டைன் நேரத்தில் தன் முழு நேரத்தை வீட்டிலே செலவிட்டு வரும் மஹிமா அதிகபடியான நேரத்தை சமூக வலைத்தளங்களிலே செலவிட்டு வருகிறார். சில நேரத்தில் தன் மனதிற்கு பிடித்த பாடலை தன் சொந்த குரலில் பாடி அதையும் ரசிகர்களுக்காக பதிவேற்றி ஆச்சரியமளித்து வருகிறார் மஹிமா.

மஹிமா நடித்துள்ள ஐயன்கரன் படம் நீண்ட நாட்களாக வெளியீட்டில் தாமதமாகி வருகிறது கொரன்டைன் முடிந்ததும் எதும் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழில் சமுத்திரகனி இயக்கும் கிட்னா படத்தில் நடித்து வருகிறார் மஹிமா. இதையடுத்து, ஒரு தெலுங்கு படத்திலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்க உள்ளார். இதை பற்றிய அறிவிப்புகள் இயல்பு நிலை திரும்பிய பின் வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.


Click it and Unblock the Notifications











