Don't Miss!
- Finance
நீங்களும் வேண்டாம்.. உங்க பிஸ்னஸ்-ம் வேண்டாம்.. தெறித்து ஓடிய சீன நிறுவனம்..!
- Automobiles
முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக வாங்க இருக்கும் புதிய கார்.. இந்த காருல போறதே தெரியாது! கப்பல் மாதிரி இருக்கும்!
- News
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ்அப் குரூப்பில் கமெண்ட்.. கொல்லப்பட்ட நபர்.. என்.ஐ.ஏ விசாரணை
- Sports
இதுமட்டும் நடந்திருந்தா என்ன ஆயிருக்கும்??.. உலக சாதனைக்கே வரவிருந்த விணை.. பும்ராவின் அதிர்ஷ்டம்!!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஸ்பெயின் திரைப்பட விழாவில் 5 பிரிவுகளில் நாமினேட் ஆன மகாமுனி...மகிமா நம்பியாருக்கு விருது
சென்னை : தமிழ், மலையாள மொழி நடிகையான மகிமா நம்பியார், 2010 ல் வெளியான காரியஸ்தன் என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையானார். இரண்டாவதாக சாட்டை படத்தில் நடித்து தமிழிலும் அறிமுகமானார்.

பிறகு தமிழில் அதிகளவில் படவாய்ப்புக்கள் வந்ததால் என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அகத்திணை, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது ஐங்கரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
2019 ல் ஆர்யா நடித்து, சாந்தகுமார் இயக்கிய மகாமுனி படத்தில் முக்கியமான கேரக்டரில் மகிமா நடித்திருந்தார். ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்த இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன் ஹீரோயினாக நடித்தார். மற்றொரு ஹீரோயின் ரோலில் மகிமாவும் நடித்திருந்தார்.
கண்ணாடி முன் நின்று ஒரு கிளிக்... ரசிகர்களை கட்டிப் போட்ட வித்யாபாலன் !
கிரைம், த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டிருந்த மகாமுனி படம் ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பை பெற்ற படம் இது. இந்த படம் இந்தியிலும் மகாமுனி என்ற பெயரிலேயே டப் செய்து வெளியிடப்பட்டது.
இந்நிலையில் லேட்டஸ்டாக ஸ்பெயினின் Madrid சர்வதேச திரைப்பட விழாவிலும் மகாமுனி திரையிடப்பட்டது. இதில் 5 பிரிவுகளில் மகாமுடி படம் நாமினேட் செய்யப்பட்டது. அதில் சிறந்த துணை நடிகைக்கான பிரிவில் மகிமா நம்பியாருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் பங்கேற்ற இந்த விழாவில் விருது வென்ற ஒரே இந்திய திரைப்படம், தமிழ் படம் என்ற பெருமையை மகாமுனி பெற்றுள்ளது.
தனக்கு சிறந்த துணை நடிகை விருது கிடைத்துள்ளதை சோஷியல் மீடியாவில் மகிழ்ச்சியுடன், மகாமுனி ஸ்டில்லுடன் பகிர்ந்துள்ளார் மகிமா. ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள கருத்தில், எனது உணர்வுகளை சொல்ல வார்த்தைகளே இல்லை. டைரக்டர் சாந்தகுமார், ஆர்யா, இந்துஜா ஆகியோருக்கு வெறும் நன்றி சொன்னால் மட்டும் போதாது என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விருது கிடைத்ததை அடுத்து மகிமா நம்பியாருக்கும், மகாமுனி படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.