கருப்பு புடவையில் சிம்பிளா ஸ்டிக்கர் பொட்டு.. ரசிகர்களின் மனதை சுண்டி இழுக்கும் மஹிமா நம்பியார்!
சென்னை: குற்றம் 23 படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் அருண் விஜய்யுடன் இணைந்து ஓ மை டாக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகை மஹிமா நம்பியார்
ஆர்யாவுடன் இணைந்து நடித்த மகாமுனி திரைப் படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டிய இவருக்கு விருதுகள் குவிகிறது
ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடித்துள்ள ஐயங்கரன் திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இப்பொழுது கருப்பு சேலையில் நெற்றியில் ஒரே ஒரு ஸ்டிக்கர் பொட்டு உடன் இருக்கும் அழகிய புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மனதை பறி கொடுக்கின்றனர்

சமூகப் போராளியாக
இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்த மகாமுனியில் சமூகப் போராளியாக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை மஹிமா நம்பியார். இதுவரை படங்களில் க்யூட் கதாநாயகியாக வந்து சென்ற இவர் மகாமுனியில் மிகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றது இந்த நிலையில் சமீபத்தில் மகா முனி படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான துணை நடிகைக்கான 2021 விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது.

அருண் விஜய்க்கு ஜோடியாக மீண்டும்
குற்றம் 23 வெற்றிக்கு பிறகு அருண் விஜய்யுடன் மீண்டும் தற்பொழுது இணைந்து நடித்து வருகிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் அருண் விஜய் மற்றும் அவரது மகன் அர்ணவ் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ஓ மை டாக். தந்தை மகன் பாசம், நாயின் பாசத்தையும் முக்கியத்துவமாக கொண்டு உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்து வருகிறார். குற்றம் 23 படத்திற்குப் பிறகு அருண் விஜய் மற்றும் மஹிமா நம்பியார் இணைந்து நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.

விரைவிலேயே ரிலீசாகும்
இசையமைப்பாளராக இருந்து இப்பொழுது ஹீரோ அவதாரம் எடுத்து அதிரடி காட்டி வரும் ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஐயங்கரன் திரைப்படம் ரிலீசுக்கு தாமதமாகிக் கொண்டிருந்தது. இந்த படத்தில் நடிகை மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் மிக விரைவிலேயே ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Recommended Video

கருப்பு சேலையில் சிம்பிளா ஸ்டிக்கர் பொட்டு
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் படங்களில் நடித்து வரும் மகிமா நம்பியார் இப்பொழுது இயக்குனர் பத்மா குமார் இயக்கத்தில் ஆசிப் அலி ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது கொரோனா பிரச்சினையால் படப்பிடிப்பு பணிகள் தாமதமாகி கொண்டு உள்ளது. இந்த நிலையில் சமூகவலைதளத்தில் மஹிமா நம்பியார் வெளியிடும் புகைப் படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன அந்த வகையில் இப்போது கருப்பு சேலையில் நெற்றியில் ஒரே ஒரு ஸ்டிக்கர் பொட்டை மட்டும் வைத்துக்கொண்டு பார்க்கவே கொள்ளை அழகில் இருக்கும் மஹிமா நம்பியாரை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











