Chaya singh: நடிகை வீட்டில் நகை திருட்டு…கைவரிசை காட்டிய பணிப்பெண் கைது!

சென்னை: தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக சாயா சிங் வீட்டில், நகையை திருடிய பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும், வீட்டில் நகைகள் இருப்பதை தெரிந்து கொண்ட பணிப்பெண், யாருக்கும் தெரியாமல் நகையை எடுத்துச் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திரைப்பட நடிகையான சாயா சிங், 2000 ஆண்டு கன்னடத்தில் வெளியான முன்னாடி என்ற படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து சில கன்னட படத்தில் நடித்து வந்த இவர், தனுஷ் நடித்த திருடா திருடி படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தில் இடம் பெற்ற மன்மத ராசா படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. இதைத் தொடர்ந்து, தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், இவருக்கு முன்னணி நடிகர்களில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குப்பின் விஜய்யுடன் கும்பிட போன தெய்வம் பாடல் மூலம் மீண்டும் ஃபேமஸ் ஆனார்.

Maid arrested for stealing jewelery from actress Chaya singh s house

நடிகை சாயா சிங்: 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வரும் இவர், தற்போது கேரக்டர் ரோல்களில் மட்டும் நடித்து வருகிறார். பிறகு சினிமாவில் சாயா சிங்கிற்கு வாய்ப்பு குறைய தொடங்கிய உடன் இவர் சின்னத்திரை பக்கம் வந்தார். கடந்த 2011ஆம் ஆண்டில் இவர் நடிப்பில் நாகம்மா என்ற சீரியல் வெளியாகி இருந்தது. இது தான் இவர் முதலில் சின்ன திரையில் அறிமுகமான தொடர். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என சின்னத்திரையில் பிசியாக பயணித்து வருகிறார் சாயா சிங்.

தங்க நகைகள் மாயம்: இந்நிலையில், பெங்களூரு பசவேஷ்வர்நகரில் உள்ள சாயா சிங்கின் தாயார் சாமனலதா வீட்டில் திருட்டுச்சம்பவம் நடந்து உள்ளது தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்த 66 கிராம் தங்கம் மற்றும் 150 கிராம் வெள்ளி ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

பணிப்பெண் கைது: சாயா சிங்கின் தாய் சாமனலதா வீட்டில் வேலை பார்த்து வந்த உஷா என்பவர் நகைகளை திருடிச் சென்றதாகவும், குற்றவாளிகளிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உஷா சில ஆண்டுகளாக சாமனலதா வீட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். சாமனலதா தங்க ஆபரணங்களை சோதனையிட்டபோது சில நகைகள் காணாமல் போனது தெரியவந்ததை அடுத்து, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் உஷா திருடியது பற்றி தெரியவந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X