twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    7 வயது இளையவருடன் மனீஷாவுக்கு திருமணம் நடந்தது!

    By Chakra
    |

    Maisha
    காட்மாண்டு: தன்னை விட 7 வயது குறைந்த தொழிலதிபரை கணவனாகக் கைப்பிடித்தார் மனீஷா கொய்ராலா.

    இன்று சனிக்கிழமை நேபாளத் தலைநகர் காட்மாண்டுவுக்கு அருகில் உள்ள கோகர்னக் காட் வனத்தில் மனீஷாவுக்கும் தொழிலதிபர் சாம்ராட்டுக்கும் திருமணம் நடந்தது.

    நேபாள இந்து வழக்கப்படி மூன்று நாட்கள் திருமணம் நடப்பது வழக்கம். அதன்படி இன்று இரண்டாம் நாள். நாளையும் திருமண சடங்குகள் நடக்கின்றன.

    அடுத்த வாரம் திருமண வரவேற்பு நடக்கிறது. இதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

    தன்னைவிட 7 வயது குறைவான இளைஞரை மனீஷா திருமணம் செய்து குறித்து அவரிடம் கருத்து கேட்டனர் சில தொலைக்காட்சி நிருபர்கள். அதற்கு அவர் இதுபற்றி எதுவும் கூற முடியாது என்றும், எங்கள் மனம் விரும்பி நடந்த இந்த திருமணம் குறித்து ஏதும் கூற வேண்டிய அவசியமில்லை என்றும் கூறிவிட்டார்.

    மனீஷாவை அடைவது என் பாக்கியம் என்று கூறியுள்ளார் மணமகன் சாம்ராட் தகாலோ.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X