கன்னட 'மஜா'வில் தீபு!

மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் தொம்மனும் மக்களும். இப்படத்தைத்தான் தமிழில் மஜா என்ற பெயரில் ரீமேக் செய்தனர்.
விக்ரம், பசுபதி வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விக்ரமுக்கு ஜோடியாக ஆசின் அசத்தினார். வடிவேலு, மணிவண்ணன், விஜயக்குமார் ஆகியோரும் படத்தில் இடம் பெற்றனர்.
இப்போது மஜாவை கன்னடத்தில் ரீமேக் செய்யவுள்ளனர். தமிழ் படங்களை ரீமேக் செய்தே காலத்தை ஓட்டி வரும் சுதீப்தான் இந்தப் படத்தின் நாயகனும். ஏற்கனவே சேதுவின் ரீமேக்கிலும் சுதீப் நடித்திருந்தார். இப்போது 2வது முறையாக விக்ரம் படம் ஒன்றின் ரீமேக்கில் சுதீப் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக, ஆசின் கேரக்டரில் தீபு நடிக்கவுள்ளார். மலையாளத்துப் பெண்ணான தீபு, தமிழில் அன்பு படத்தில் அறிமுகமானவர். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் வராததால், கன்னடத்திற்கு மாறினார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே அங்கேயே செட்டிலாகி விட்டார்.
தமிழ் மஜாவில் அய்யார் எட்டு நாட்டுக் கட்டை என்ற ஒற்றைப் பாடலுக்கு சிந்து துலானி சிலுசிலுப்பான குத்தாட்டம் போட்டார். கன்னடத்திலும் இந்த ஒற்றைப் பாட்டு வருகிறது. அதற்குக் குத்தாட்டம் போடவிருப்பவர் பூஜா காந்தி.
கொக்கி நாயகியான பூஜா காந்தி, தமிழில் சரியான வாய்ப்புகள் வராததால் கன்னடத்திற்குப் போய் ஹிட் ஆனவர். இப்போது குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போடவுள்ளார்.


Click it and Unblock the Notifications











