விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
மும்பை: 50 வயதிலும் செம கவர்ச்சியாக வொர்க்கவுட் செய்யக் கூடிய பாலிவுட் நடிகை என்றால் அது மலைகா அரோரா தான். போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வரும் மலைகா அரோரா தனது மகனிடம் சமீபத்தில் கேட்ட அப்படியொரு கேள்வி பாலிவுட்டை ஷாக் ஆக்கியிருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான உயிரே படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ”தக்க தையா தையா” பாடலில் ரயில் மீது குத்தாட்டம் போட்டு சர்வதேச அளவில் பிரபலமானவர் நடிகை மலைகா அரோரா.

ஏற்கனவே அர்பாஸ் கான் எனும் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரை இவர் காதலித்து திருமணம் செய்த நிலையில், சில பல காரணங்கள் காரணமாக பிரேக்கப் செய்து பிரிந்தார். கடந்த சில ஆண்டுகளாக நடிகர் அர்ஜுன் கபூருடன் டேட்டிங் சென்று கொண்டிருக்கும் மலைகா அரோரா தனது 20 வயது மகனுடன் இப்படியொரு உரையாடலை நடத்தியுள்ளார்.
ஐம்பதிலும் ஆசை வரும்: காதலுக்கு வயது ஒரு தடையே இல்லை என ஏகப்பட்ட நட்சத்திர ஜோடிகள் நிரூபித்து வரும் நிலையில், 38 வயது அர்ஜுன் கபூரை 50 வயதை தாண்டிய மலைகா அரோரா காதலித்து வருகிறார். இந்த வித்தியாசமான பாலிவுட் ஜோடியின் காதல் குறித்து ஏகப்பட்ட ட்ரோல்கள் வந்தாலும், இருவரும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தங்கள் காதலை கொண்டாடி வருகின்றனர். மலைகா அரோரா வெளியிடும் வொர்க்கவுட் வீடியோவுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
20 வயது மகன்: 1998ம் ஆண்டு அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்ட நடிகை மலைகா அரோரா கடந்த 2017ல் அர்ஜுன் கபூர் உடனான காதல் காரணமாக அர்பாஸ் கானை விவாகரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகின. அர்பாஸ் கான் மலைகா அரோரா தம்பதியினருக்கு 20 வயதில் அர்ஹான் கான் எனும் மகன் உள்ளார். அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் இந்தியா திரும்பியுள்ள அவர் Dumb Biriyani எனும் ஷோவை யூடியூபில் நடத்தி வருகிறார்.
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?: அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மலைகா அரோரா தனது மகனிடம் கன்னித்தன்மையை எப்போ இழந்த என்கிற கேள்வியை கேட்க, அதற்கு அவருடைய மகன் அளித்த ரியாக்ஷன் புரமோ தற்போது தீயாக பரவி வருகிறது. மேலும், உண்மையா, ஒழுங்கா பதிலை வெளிப்படையா சொல்ல வேண்டும் என்றெல்லாம் அந்த புரமோவில் மலைகா மகனை பார்த்து கேட்பதை பார்த்து பாலிவுட் பிரபலங்களே மலைத்து போய் நிற்கின்றனர்.
கல்யாணம் எப்போம்மா?: அம்மாவின் கேள்விக்கு கொக்கிப் போடும் விதமாக அர்ஜுன் கபூருடன் கல்யாணம் எப்போம்மா என மலைகா அரோராவின் மகனும் நறுக்கென கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். அதற்கான பதிலும் அந்த முழு வீடியோவில் விரைவில் வரும் என தெரிகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, மைதான் உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூர் மலைகா அரோராவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், இப்படியொரு கேள்வியை மலைகா அரோராவின் முதல் கணவருக்கு பிறந்த மகன் எழுப்பி உள்ளார். பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் தற்போது அந்த புரமோ தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











