ஆன்ட்டி மீண்டும் நிக்கரில் சுற்றுகிறார், வெட்கமே இல்லையா?: நடிகையை திட்டும் நெட்டிசன்ஸ்
மும்பை: பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா ஜிம்மிற்கு அணிந்து சென்ற உடையை பார்த்த நெட்டிசன்கள் கண்டமேனிக்கு திட்டியுள்ளனர்.
பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவுக்கு 45 வயதாகிறது. அவர் தன்னை விட 12 வயது சிறியவரான நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இதற்காக பலரும் அவர்களை கிண்டல் செய்கிறார்கள்.
மேலும் மலாய்கா வெளியே செல்லும்போது குட்டி, குட்டியாக உடை அணிவதற்காகவும் அவ்வப்போது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார்.
மலாய்கா
மலாய்கா அரோரா தினமும் ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்வார். மேலும் யோகா, தியானமும் செய்வார். அவர் ஜிம்மிற்கு செல்லும்போது அணியும் உடை பலருக்கும் பிடிக்கவில்லை. அவர் அணியும் உடையை பார்த்தால் 17 வயது மகனின் அம்மா அணிவது போன்று இல்லை, ஏதோ அவருக்கே 17 வயது தான் ஆகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் போன்று என விமர்சனம் எழுந்துள்ளது.

ஆன்ட்டி
மலாய்கா வயதில் இருக்கும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், ஷில்பா ஷெட்டி, சிங்கிள் அம்மாவான கரிஷ்மா கபூர் ஆகியோர் எல்லாம் குழந்தைகளை கவனித்துக் கொண்டு வயதுக்கு ஏற்றது போன்று உடை அணிகிறார்கள். மலாய்காவின் தங்கையே ஒழுங்காக இருக்கிறார். ஆனால் இந்த ஆன்ட்டிக்கு தான் ஒரு டீனேஜ் பெண் என்று நினைப்பு. தன்னை விட வயதில் மிகவும் சிறியவரான ஷிரிஷ் குந்தரை மணந்த ஃபரா கானை யாரும் கிண்டல் செய்யவில்லை. மேலும் கவர்ச்சியாக உடை அணியும் ஷில்பா ஷெட்டியையும் யாரும் கலாய்க்கவில்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.

மகன்
எப்பொழுது பார்த்தாலும் ஜிம்மில் கிடப்பது இல்லை என்றால் காதலர் அர்ஜுன் கபூருடன் ஊர் சுற்றுவது. மகன் ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பாவது இந்த மலாய்கா ஆன்ட்டிக்கு இருக்கிறதா என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

வெட்கம்
மலாய்கா அரோராவின் புகைப்படத்தை பார்த்தவர்கள் ஆன்ட்டி மீண்டும் நிக்கரில் வந்துவிட்டார். அவரை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது. இவருக்கு வெட்கம் என்பதே இல்லையா?. இவருக்கு யாராவது எப்படி உடை அணிய வேண்டும் என்று கூறுங்கள். மீடியாக்கள் அவரின் புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications