என்னை யாராவது ஐட்டம் என்றால் சப்புன்னு அறைந்துவிடுவேன்: நடிகை ஆவேசம்

By Siva

மும்பை: ஐட்டம் என்ற வார்த்தையை கேட்டாலே டென்ஷன் ஆகிறார் பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா.

தொலைக்காட்சி பிரபலமாக இருந்த மலாய்கா அரோரா சய்ய, சய்யா பாடல் மூலம் டான்ஸராக பிரபலம் ஆனார். அவர் பல படங்களில் குத்துப்பாட்டுக்கு ஆடியுள்ளார், ஆடி வருகிறார்.

அத்தகைய பாடல்களை பாலிவுட்டில் ஐட்டம் டான்ஸ் என்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து மலாய்கா கூறியதாவது,

இயக்குநர்கள்

இயக்குநர்கள்

நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐட்டம் பாடல்களை படத்தில் வைக்க மாட்டோம் என்று பல இயக்குநர்கள் முடிவு செய்துள்ளனர். அத்தகைய பாடல்களை தடை செய்ய வேண்டும் என்று நான் கூற மாட்டேன். நம் படங்களில் வரும் பாடலும், நடனமும் நம் கலாச்சாரத்தை பற்றியது. அதை ஏன் மாற்ற வேண்டும்?

மலாய்கா

மலாய்கா

குறிப்பிட்ட பாடல்களை ஐட்டம் பாடல் என்று கூறுவது எனக்கு பிடிக்கவில்லை. யாராவது என்னை பார்த்து என்ன ஒரு ஐட்டம் என்று கூறினால் சப்பென்று அறைந்துவிடுவேன். அத்தகைய பாடல்கள் மோசமாக இல்லை. குத்தாட்ட பாடல்கள் ஜாலியாகத் தான் உள்ளன என்கிறார் மலாய்கா.

அர்ஜுன் கபூர்

அர்ஜுன் கபூர்

டிவி நிகழ்ச்சியில் நடுவராக உள்ள மலாய்கா தற்போது தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். கணவரை விவாகரத்து செய்ததில் இருந்தே மலாய்காவின் பெயர் அர்ஜுனுடன் சேர்ந்து அடிபடுகிறது. அவர்கள் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள்.

பாலிவுட்

பாலிவுட்

அர்ஜுன் கபூரும், மலாய்கா அரோராவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது. மலாய்கா தன்னை விட 12 வயது சிறியவரான அர்ஜுனை காதலிக்கிறார். மலாய்காவுக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X