மலைக்க வைக்கும் மலைக்கா அரோரா.. இப்படி யோகா செய்தா.. தாராளமா ”தக்க தைய தையா”ன்னு ஆடலாமே!
மும்பை: உயிரே படத்தில் ஷாருக்கானுடன் ஓடும் ரயிலில் 'தக்க தையா தையா' பாடலுக்கு நடனமாடிய மலைக்கா அரோரா, இந்த லாக்டவுனில் அற்புதமான யோகாக்களை செய்து அசத்தி வருகிறார்.
1998ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியான உயிரே படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.
தொடர்ந்து பாலிவுட் படங்களில் பல ஐட்டம் நம்பர் பாடல்களுக்கு குத்து டான்ஸ் ஆடி கவர்ச்சி கன்னியாக வலம் வரும் மலைக்கா அரோரா, கிளாமரை தாண்டி யோகா, உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட விசயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஹாட் குயின்
டிவி நடிகை, டான்ஸர், சல்மான் கானின் தபங் படம் உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ள தயாரிப்பாளர், நடிகை, யோகா மாஸ்டர், கிளாம் குயின் என மலைக்கா அரோரா இந்த வயதிலும் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாக பேசப்பட்டு வருகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் 11 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

யோகா குரு
இந்த லாக்டவுனில் சில காலம் சமூக வலைதளத்திற்கு ஓய்வு கொடுத்த மலைக்கா அரோரா, மீண்டும் தனது யோகா புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார். இந்த வாரத்திற்கான ஆசனமாக ஹாலாசனத்தை நடிகை மலைக்கா அரோரா நீல நிற ஜிம் உடை அணிந்து செய்து அசத்தியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு
பிரதமர் மோடி கொண்டு வந்த சர்வதேச யோகா தினத்தை நாடு முழுவதும் பரப்பும் நோக்கிலே மீண்டும் தான் யோகா புகைப்படங்களை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து வருவதாக, தற்போது தெரிவித்துள்ள நிலையில், வரும் ஜூன் 21ம் தேதி வரவுள்ள சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 14 நாட்கள் நாள்தோறும் ஒரு யோகாவை தனது ரசிகர்களுக்கு கற்றுத் தர மலைக்கா தீர்மானித்துள்ளார்.

வொர்க்கவுட் ஃப்ரீக்
மாடலிங், நடிப்பு, நடனம் போன்றவற்றுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறாரோ அந்த அளவுக்கு தான் ஒரு வொர்க்கவுட் பைத்தியம் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிரூபித்து வருகிறார் மலைகா அரோரா. பாலிவுட் நடிகை இஷா குப்தாவை போல இவரது உடம்பும், கட்டுக்கோப்பாக இவர் இஷ்டபடி வளையும் தன்மைக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











