தொடை சதையை குறைக்கணுமா?.. ஆப்பிள் போல இடுப்பு வேண்டுமா?.. மலைகா ஆரோரா வெளியிட்ட டிப்ஸ் வீடியோ!

மும்பை: 51 வயதிலும் தனது கட்டழகை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோரா யோகா செய்யும் வீடியோக்களையும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஏகப்பட்ட பெண்களை கவர்ந்துள்ளது.

பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு அதிகப்படியான சதை தொடையிலும், பின்புறத்திலும் இருக்கும். அந்த தேவையற்ற கொழுப்பை எப்படி குறைக்கலாம் என்கிற டிப்ஸ் வீடியோவை தான் தற்போது மலைகா அரோரா வெளியிட்டுள்ளார்.

Malaika Arora shares a super workout tips for lose thigh fat and making apple hips
Photo Credit:

1973ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி பிறந்த மலைகா அரோரா 1998ம் ஆண்டு அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்தார். அதன் பின்னர், இளம் நடிகர் அர்ஜுன் கபூருடன் காதல் ஏற்பட 2017ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.

அர்ஜுன் கபூருடன் பிரேக்கப்: தன்னை விட 15 வயது குறைவான அர்ஜுன் கபூரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த மலைகா அரோரா கடந்த ஆண்டு பிரேக்கப் செய்ததாக தகவல்கள் வெளியாகின. அதற்கு முன்பு வரை இருவரும் ஏகப்பட்ட டேட்டிங் புகைப்படங்களை பகிர்ந்து வந்த நிலையில், அதன் பின்னர், இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவே இல்லை என பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. மலைகா அரோராவின் மகனுக்கே 21 வயதுக்கு மேல் ஆகிறது என்கின்றனர். அர்ஜுன் கபூரை தொடர்ந்து லேட்டஸ்ட்டாக அவர் யாருடன் லிவ்வின் உறவில் இருக்கிறார் என்பது குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இதற்கு மேல், பார்ட்னர் வேண்டாம் என நினைத்து விட்டாரா மலைகா அரோரா என பாலிவுட்டில் ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

ஆப்பிள் இடுப்பு: நடிகை மலைகா அரோரா உடற்பயிற்சி டிப்ஸ்களை ஏகப்பட்ட செலிபிரிட்டிக்களுக்கே கொடுத்து வருகிறார். ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸ் போல நம்ம பாலிவுட்டில் மலைகா அரோரா வயதான காலத்திலும் செம ஃபிட்டாகவும் அழகாகவும் தனது உடல் அமைப்பை பராமரித்து வருகிறார். பெண்கள் தங்களின் தொடை பகுதியில் உள்ள கொழுப்புகளையும், ஆப்பிள் போல இடுப்பு வேண்டுமென்றால் இரண்டு டம்பிள்ஸ்களை வைத்துக் கொண்டு உட்கார்ந்து எந்திரிக்கும் உடற்பயிற்சி டிப்ஸை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மலைகா அரோரா.

குவியுது லைக்ஸ்: சுமார் 19 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் மலைகா அரோராவை சர்வதேச அளவில் பின் தொடர்ந்து வருகின்றனர். ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் மலைகா அரோரா பிரவுன் கலர் ஜிம் உடையில் கவர்ச்சி பொங்க குனிந்து, நிமிர்ந்து செய்யும் வொர்க்கவுட் வீடியோவுக்கு லைக்குகளை போட்டு வருகின்றனர்.

சினிமா, சின்னத்திரை, தயாரிப்பாளர்: 1998ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான உயிரே படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான "தக்க தையா தையா" பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி இந்தியா முழுவதும் பிரபலமானவர் தான் மலைகா அரோரா. வல்லரசு படத்தின் இந்தி ரீமேக்கான இந்தியன் படத்திலும் குத்தாட்டம் போட்டார். கால், ஹே பேபி, ஓம் சாந்தி ஓம், ஹவுஸ்ஃபுல், தபாங், ஹேப்பி நியூ இயர் கடந்த ஆண்டு வெளியான ஏக் நம்பர் படம் வரை கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்றிய இவர், சல்மான் கானின் தபாங் மற்றும் தபாங் 2 உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X