»   »  விலாங்கு மீனுக்கு விலங்கு?

விலாங்கு மீனுக்கு விலங்கு?

Subscribe to Oneindia Tamil

வாள மீனு மாளவிகா பற்றி கோலிவுட்டில் படு சூடான வதந்தி உலா வருகிறது. கேபரே டான்ஸ் ஆடப் போய் கைதாகி, கணிக்கமாகவிடுதலை செய்யப்பட்டார் என்பதுதான் அந்த சூடான கிசுகிசு.

வாள மீனு படத்திற்குப் பிறகு மாளவிகாவுக்கு மார்க்கெட் எக்குத் தப்பாக சூடு பிடித்து விட்டது. கை நிறையப் படங்களுடன் நடித்துவருகிறார். அவருக்கும், பிரபலமான இயக்குநர் பிளஸ் நடிகருக்கும் இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டு விட்டதாம். இவர் ணிதலில்விஜய், அஜீத்தை வைத்து இரண்டு படங்களை இயக்கியவர். மூன்றாவது படத்தில் இவரே நாயகனாகி விட்டார்.

அந்தப் படத்தில் சிம்ரன் போட்ட ஆட்டம், ரசிகர்களுக்கு ரொம்ப நியூவாக இருந்தது. இப்படத்தின் மூலம் சர்ச்சை இயக்குநர் ஆனார்நம்ம இயக்குநர். தொடர்ந்து அன்பே ஆருயிரே என்று அட்டகாசம் செய்த அந்த இயக்குநர் இப்போது இரண்டு பரபரப்பான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதில் ஒரு படத்தில் மாளவிகாவும் இருக்கிறார். இப்படத்தில் மாளவிகாவுடன் பழகப் போய், அவர் இயக்குநருக்கு ரொம்பவும் நெருங்கி விட்டாராம்.சில மாதங்களுக்கு ணின்பு தேனி பக்கம் படப்பிடிப்புக்காக இயக்குநர் ணிகாமிட்டிருந்தபோது, தேனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனது பிறந்தநாளை பார்ட்டி வைத்து கொண்டாடினார் இயக்குநர்.

அதில் தேனி, மதுரைப் பக்கம் உள்ள தனது ஜாதி, சனத்தைச் சேர்ந்த பெருசுகள், பிரபலங்களை கூப்பிட்டு குஜால்படுத்தி அனுப்பினார். அந்த பார்ட்டியின்போது மாளவிகாவின் டான்ஸ்புரோகிராம் அமர்க்களப்பட்டதாம்.

இதேபோல சமீபத்தில் சென்னையில் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார் இயக்குநர். அதிலும் மாளவிகாவின் டான்ஸுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.பிறந்த நாள் விழா என்றுதான் இந்த பார்ட்டிக்கும் பெயர் வைத்திருந்தார்.

சூப்பர் டான்ஸர்களுடன் மாளவிகா சுழன்று சுழன்று ஆட அரங்கமே அமர்க்களமாகி விட்டதாம். நள்ளிரவைத் தாண்டியும் நாட்டியம் தொடர,திடீரென உள்ள புகுந்த சிலரைப் பார்த்து பார்ட்டியில கலந்து கொண்டவர்களுக்கு கடுப்பானதாம்.

யாருப்பா வாட்ச்மேன்களை எல்லாம் உள்ளே விட்டது என்று கோபத்துடன் கூறியுள்ளனர். ஆனால் அப்புறம்தான் தெரிந்ததாம், அவர்கள்வாட்ச்மேன் இல்லை போலீஸ் என்று!

பக்கத்தில் ஏதோ ஹோட்டில் ரெய்டுக்காக வந்த போலீஸாருக்கு, இயக்குநரின் பார்ட்டியில், மாளவிகாவின் அற்புத நடனம் இடம் பெற்றிருப்பதாக யாரோபோட்டுக் கொடுத்து விட, அப்படியே இங்கும் வந்து விட்டார்கள்.

தடை செய்யப்பட்ட கேபரே டான்ஸ் ஆடியதற்காக மாளவிகாவையும், உடன் ஆடியவர்களையும் கைது செய்வதாக போலீஸார் கூறவே அத்தனை பேரும் ஆடிப்போய் விட்டனர்.

உடனே நம்ம இயக்குநர் பதறிப் போய் மேலதிகாரிகள், தனக்குத் தெரிந்த அரசியல்வாதிகள் என பலரையும் அந்த அர்த்த ராத்திரியில் போன் செய்துஎழுப்பி உதவி கோரியுள்ளார். ஒரு வழியாக உதவிக் கரம் நீள, மாளவிகா அண்ட் கோவை விட்டு விட்டு போலீஸார் திரும்பினாராம்.

இந்த சம்பவ்ததால் அதிர்ச்சியான மாளவிகா, இனிமேல் பொது இடங்களில் டான்ஸ் ஆடக் கூப்பிட்டால் வர மாட்டேன் என இயக்குநரிடம் கண்டினஷாக சொல்லி விட்டாராம்.மாளவிகா இப்படி ஒரே போடாக போட்டு விட்டதால் கூட ரெண்டு பெக் போட்டுக் கொண்டு இயக்குநர் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil