»   »  சபரி சம்பளம்-மாளவிகா புகார்

சபரி சம்பளம்-மாளவிகா புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சபரி படத்தில் பேசியபடி சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று நடிகர் சங்கத்தில் நடிகைமாளவிகா புகார் கொடுத்துள்ளார்.

விஜயகாந்த் நடிக்க, சேலம் ஏ.சந்திரசேகர் (சுள்ளான் பட தயாரிப்பாளர்) தயாரிப்பில், சுரேஷ் இயக்கத்தில்உருவாகும் படம் சபரி. இதில் விஜயகாந்த்துக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் மாளவிகா, இன்னொருவர்ஜோதிர்மயி.

முதலில் மாளவிகா மட்டும்தான் ஹீரோயின் என்று கூறப்பட்டது. ஆனால் ஜோதிர்மயியை அப்புறமாகசேர்த்தனர். ஜோதிரை சேர்த்த பின்னர் மாளவிகாவின் கேரக்டரை டம்மி ஆக்கி விட்டதாக ஏற்கனவே செய்திகள்கசிந்தன (ஜோதிர் ஒத்துழைப்பு அப்படி!)

இந்த நிலையில் சபரி படத் தயா>ப்பாளர் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் மாளவிகா. அந்தப்புகாரில், தயாரிப்பாளர் என்னிடம் ரூ. 11 லட்சம் சம்பளம் தருவதாக பேசி ஒப்பந்தம் செய்தார். இதில் 7லட்சம்தான் கொடுத்துள்ளனர்.

மீதப் பணமான 4 லட்சத்தை இன்னும் தரவில்லை. அதைத் தராமல் ஏமாற்றப் பார்க்கிறார். அவர் மீதசம்பளத்தைக் கொடுக்கும் வரை படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று கூறியுள்ளார்.

மாளவிகா கொடுத்த புகாரின் பேரில், படத்தின் பிரதிகளை தங்களது உத்தரவு இல்லாமல் வெளியிடக் கூடாதுஎன்று நடிகர் சங்கம் சார்பில் சம்பந்தப்பட்ட கலர் லேபுக்கு கடிதம் போயுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல, தன்னிடம் சொன்ன போது கூறிய கதை வேறு, இப்போது எடுத்துள்ள கதை வேறு. என்னை டம்மிஆக்கி விட்டு ஜோதிர்மயியை பெ>துபடுத்தி விட்டனர்.

மேலும், என்னை ஹீரோயின் என்று கூறி விட்டு 2 பாட்டுக்களையும், சில காட்சிகளையும் மட்டுமேஎடுத்துள்ளனர் என்று கூறி இயக்குநர் சங்கத்தில் இன்னொரு புகார் கொடுக்கவும் மாளவிகா முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது.

சபரி படத்தை விஜயகாந்த் வெகுவாக எதிர்பார்த்துள்ளார். படமும் முடிந்து ரிலீஸாகத் தயாராக உள்ளது. இந்தநிலையில் மாளவிகா ரூபத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இதேபோல சம்பளப் பிரச்சினை காரணமாக தெலுங்குப் படம் ஒன்றின் ரிலீஸையே நிலா, கோர்ட்டில்கேஸ் போட்டு தடை செய்தது நினைவிருக்கலாம். மாளவிகாவும் கோர்ட்டுக்குப் போவாரா அல்லது கட்டப்பஞ்சாயத்து மூலம் தீர்வு காண்பாரா என்பது தெரியவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil