என்ன இது சின்னப்புள்ளத்தனமா.. கையில் கிளாஸ்.. பால் பிட்டில் விழுந்து விளையாடும் மாளவிகா!
சென்னை: "கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு" பாடலுக்கு அந்த ஆட்டம் போட்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நடிகை மாளவிகா சினிமாவுக்கு லாங் கேப் விட்ட நிலையில், சமீப காலமாக சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். இன்ஸ்டாகிராமில் பிகினி போட்டோக்களையும் பாரில் சரக்கடித்து என்ஜாய் பண்ணும் புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார்.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ஸ்வேதா கொன்னூர் மேனன் தனது 19 வயதில் மாளவிகா எனும் பெயரில் அஜித்தின் உன்னைத் தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம், வெற்றிக் கொடி கட்டு, சீனு, லவ்லி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

அதன் பின்னர், தமிழில் இவருக்கு பெரிதாக மார்க்கெட் இல்லாத நிலையில், ஒரு பாடலுக்கும், கேமியோ ரோலிலும் நடிக்கத் தொடங்கினார். பேரழகன், ஐயா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், சந்திரமுகி, சித்திரம் பேசுதடி உள்ளிட்ட படங்களில் அப்படித்தான் இவர் பாடல் காட்சிகளிலும் சைடு ரோலிலும் நடித்திருந்தார்.
2007ல் திருமணம்: சுமேஷ் மேனன் என்பவரை 2007ல் திருமணம் செய்துக் கொண்டு ஃபேமிலி கேர்ளாகவே மாறிவிட்டார் மாளவிகா. திருமணத்துக்கு முன்பாக அவர் நடித்த மச்சக்காரன், குருவி, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட படங்கள் 2008ம் ஆண்டு வெளியானது. ஆனால், அதன் பிறகு எந்தவொரு படத்திலும் அவர் கமிட் ஆகி நடிக்கவே இல்லை. பொன் குமரன் இயக்கத்தில் ஜிவா நடித்த கோல்மால் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருந்த மாளவிகாவுக்கு அந்த படம் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில், தொடர்ந்து நடிக்க வேண்டும் என்கிற எண்ணமே போய்விட்டதாக கூறுகின்றனர்.
கையில் ஒயின் கிளாஸ்: பெங்களூரில் பங்களா வாழ்க்கையை வாழ்ந்து வரும் மாளவிகா மற்ற நடிகைகள் போல பார்ட்டிக்கு செல்வதும், அதீத குடிப்பழக்கம் இருந்தாலும், சோஷியல் மீடியாவில் முகமூடி போட்டுக் கொண்டு இருப்பதை போல இல்லாமல், வெளிப்படையாக தனது வாழ்க்கை அப்டேட்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். கையில் ஒயின் கிளாஸ் உடன் தற்போது எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா.

சின்னப்புள்ள தோத்துடும்: மால்களுக்கு சென்றால், குழந்தைகள் பிளாஸ்டிக் பந்துகள் நிரப்பப்பட்ட நீச்சல் குளம் போன்ற பால் பிட்டில் விழுந்து குதித்து விளையாடுவார்கள். ஒயின் கிளாஸ் உடன் சில போட்டோக்களை ஷேர் செய்த மாளவிகா பால் பிட்டில் விழுந்து விளையாடும் போட்டோ ஒன்றையும் பதிவிட அதற்கு ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. முன்னதாக பீச்சில் பிகினியுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எல்லாம் அவர் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











