கொளுத்தி போட ஓரளவு வேண்டாமா?.. அந்த நபருடன் நானா?.. கடுப்பான மாளவிகா மோகனன்!

சென்னை : வதந்தியை பரப்புவதற்கும், கொளுத்தி போடுவதற்கும் ஓரளவு வேண்டாமா என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

கேரளாவை சார்ந்த பிரபல ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் தான் மாளவிகா.

இவர் 2013ம் ஆண்டு வெளியான பட்டம் போலே மலையாள படத்தின் மூலம் மலையாள திரைத்துறையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

ஈரான் இயக்குனர் மஜித் மஜீது இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தில் நடித்ததின் மூலம் இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அனைவருக்கும் தெரிந்த முகமானார் மாளவிகா. இதையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனும், பேட்ட படத்தில சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் முக்கியமானதாக இருந்தாலும் அவ்வளவாக பேசப்படவில்லை.

மாறன் படத்தில்

மாறன் படத்தில்

இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்தது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகே மாளவிகா அனைவரின் பேவரைட் ஹீரோயினாக மாறிவிட்டார். மாஸ்டருக்குப் பிறகு தன நடித்துள்ள மாறன் திரைப்படம் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் இளம் பத்திரிக்கை செய்தியாளராக நடித்திருந்தார். ஆனால், இந்த படம் வெற்றி பெறவில்லை.

எத்தனை டேக்?

எத்தனை டேக்?

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அவர் சமீபத்தில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர், மாறன் படத்தில் படுக்கை அறை காட்சிக்கு எத்தனை டேக்? என கேட்க கடுப்பான மாலு, அந்த நெட்டிசன்சை விளாசினார்.

ஓரளவு வேண்டாமா?

ஓரளவு வேண்டாமா?

அதே போல, டிவிட்டர் லைவ் சாட்டில் பேசிய மாளவிகா, பாலிவுட் நடிகர் சல்மான் கான் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி பரவி வருவதற்கு பதிலளித்துள்ள மாளவிகா மோகனன், வதந்தியை பரப்புவதற்கும், கொளுத்தி போடுவதற்கும் ஓரளவு வேண்டாமா, சல்மான் கான் படத்தில் மாளவிகா சர்மா தான் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X