மலைக்க வைக்கும் மாஸ்டர் ஹீரோயின்.. டிராவல் லெய்ஸூர் அட்டைப் பட அழகியானார் மாளவிகா மோகனன்!
சென்னை: பிரபல சுற்றுலா இதழான Travel Leisure-ன் அட்டைப் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் இடம் பிடித்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனனின் மகளும் பான் இந்தியா நடிகையுமான மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருப்பவர்.
தனது அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து லைக்குகளை அள்ளி வந்த மாளவிகா, தற்போது கவர் போட்டோவிற்கும் போஸ் கொடுத்து இருக்கிறார்.

விஜய்யுடன் ரொமான்ஸ்
தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் எப்படி ரொமான்ஸ் செய்திருக்கிறார் என்பதை பார்க்க தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தீபாவளிக்கு மாஸ்டர் படம் ரிலீசாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி, விஜய்சேதுபதி நடித்திருந்த பேட்ட படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

மலைக்க வைக்கும் மாளவிகா
பைக் ரேஸர், போட்டோகிராஃபர், சிறந்த நடிகை என பல திறமைகளை தன்னுள் வைத்துக் கொண்டு இருக்கும் மாளவிகா மோகனன், சமீப காலமாக தனது அதிர வைக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். இந்நிலையில், தற்போத் Travel Leisure இதழுக்காக இவர் கொடுத்துள்ள அசத்தலான போஸ் எல்லாம் கவர் போட்டோவாக தற்போது வெளியாகி இருக்கிறது.

தொப்பி அணிந்து
உச்சகட்ட கவர்ச்சியாக இருந்தாலும் சரி, சிம்பிள் பியூட்டியாக இருந்தாலும் சரி, வசீகரிக்கும் கண்களால் மாளவிகா மோகனன், கிடைத்த இடத்தில் எளிதில் இறங்கி சிக்ஸர் அடித்து விடுவார். தொப்பி அணிந்தபடி, மயக்கும் விழிகளால் இவர் போஸ் கொடுத்துள்ள மேலும், சில புகைப்படங்களும் டிராவல் லெய்ஸூர் இதழில் வெளியாகி இருக்கிறது.
Recommended Video

ரொம்ப கம்மி
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருந்தாலும், மற்ற நடிகைகளை ஒப்பிட்டு பார்த்தால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாளவிகா மோகனனுக்கு வெறும் 1.5 மில்லியன் ரசிகர்கள் மட்டுமே உள்ளனர். தமிழ், மலையாளம், பாலிவுட் என பல்வேறு மொழிகளில் நடித்தும், மாடல் அழகியாக பல முறை தாராளமாக புகைப்படங்களை வெளியிட்டும் இவருக்கு ரசிகர்கள் அதிகரிக்காதது ஏன் என்று தான் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











