ரொம்ப கம்ஃபர்ட்டா இருக்கு.. வேஷ்டி கட்டி குப்புறப்படுத்தப்படி போஸ் கொடுத்திருக்கும் மாளவிகா மோகனன்!

சென்னை: நடிகை மாளவிகா மோகனன் வேஷ்டி கட்டி குப்புறப்படுத்தபடி கொடுத்துள்ள ஹாட் போஸ் வைரலாகி வருகிறது.

பிரபல ஒளிப்பதிவாளர் அழகப்பன், சினிமா இயக்குநராக அறிமுகமான பட்டம்போலே படத்தில் தான் நடிகை மாளவிகா மோகனனும் நாயகியாக அறிமுகமானார்.

இந்த லாக்டவுனில் சமூக வலைதளங்களில் அப்பாவும் பிரபல ஒளிப்பதிவாளருமான கே.யூ. மோகனன் எடுக்கும் அட்டகாச புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

துல்கர் சல்மானுடன்

துல்கர் சல்மானுடன்

இயக்குநர் அழகப்பன் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான அவரது அறிமுக படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நம்ம மாளவிகா மோகனன். கேரள பெண்ணான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் செய்த அறிமுகம்

கார்த்திக் சுப்புராஜ் செய்த அறிமுகம்

கடந்த ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி வைத்தார் மாளவிகா மோகனன். ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் படத்திலேயே நடித்த திறமையான இவரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த பெருமை கார்த்திக் சுப்புராஜையே சேரும்.

விஜய்சேதுபதியுடன் ரெண்டு படம்

விஜய்சேதுபதியுடன் ரெண்டு படம்

பேட்ட படத்தில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதி, மீண்டும் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்த இரு படங்களிலும், மாளவிகா மோகனனும் நடித்து இருப்பது கூடுதல் சிறப்பான விஷயம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள மாஸ்டர் படத்தில் கல்லூரி ஆசிரியையாக மாளவிகா நடித்துள்ளார்.

வேஷ்டி அணிந்து

வேஷ்டி அணிந்து

சில தினங்களுக்கு முன்பாக பச்சை நிற வேஷ்டியும் முண்டா பனியனும் அணிந்தபடு படு கவர்ச்சியாக ஜன்னல் ஓரம் நிற்கும் புகைப்படத்தை நடிகை மாளவிகா மோகனன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, பல தளபதி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருந்தார். சுமார் 3.5 லட்சத்துக்கும் மேல் அந்த போட்டோவிற்கு லைக்குகளும் குவிந்தன.

கம்ஃபர்ட்டா இருக்கு

கம்ஃபர்ட்டா இருக்கு

இந்நிலையில், மீண்டும் அதே வேஷ்டியுடன் நீல நிற டாப்ஸ் அணிந்து, மெத்தை மீது குப்புறப்படுத்தபடி ஒரு போஸ்ட்டை போட்டு தற்போது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார். மேலும், தனக்கு மிகவும் கம்ஃபர்ட்டான உடையை கண்டுபிடித்து விட்டேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

லாக்டவுன் அட்டகாசம்

லாக்டவுன் அட்டகாசம்

இந்த லாக்டவுன் காலத்தில் பல ஐடி ஊழியர்களும் வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலையில், அதிகளவில் வெறும் லுங்கியை மட்டுமே அணிந்தபடி பணிபுரிந்து வருகின்றனர். அதே போல, மாளவிகா மோகனனும், கசகசன்னு பல ஆடைகளை அணிந்து கொள்ளாமல், நல்லா காத்து வரும் வேஷ்டியை அணிந்து கொண்டு கம்ஃபர்ட்டா இருக்கு எனக் கூறுகிறார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X