Malavika Mohanan: கடற்கரையில் டூ பீஸில் காத்து வாங்கும் மாளவிகா மோகனன்.. அதை ரொம்ப விரும்புவாங்க போல
சென்னை: தமிழ் சினிமாவின் கிளாமர் குயினாக ரசிகர்கள் கொண்டாடும் நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழில் அடுத்து வெளியாகவுள்ள படம் சர்தார் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்தாலும் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாலத்தீவில் அவர் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடலை ரசித்தபடி தனியாக நடந்து செல்லும் காட்சிகள், காற்றில் தலைமுடியை பறக்கவிட்டபடி கொடுத்துள்ள போஸ்கள் என அவரது புதிய போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர். குறிப்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்களுடன் செம ஜாலியாக பேசிக் கொண்டு இருப்பார். ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு நச் பதில்களைச் சொல்லி அமர்க்களப்படுத்துவார். அதேபோல், படப்பிடிப்பு இடைவெளி கிடைத்தாலே வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் அவர், அங்கிருந்து எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த முறை மாலத்தீவின் அழகிய கடற்கரையில் எடுத்துள்ள புகைப்படங்கள்தான் இணையத்தை கலக்கி வருகிறது.

பிகினி டாப்புடன், ஆர்டிஸ்டிக் டிசைனில் அமைந்துள்ள டிரான்ஸ்பரண்ட் சரோங் அணிந்து கடற்கரையில் நின்றபடி, கடலை ரசிக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சில புகைப்படங்களில் கடலை நோக்கி தனியாக நடந்து செல்கிறார். மற்ற சில புகைப்படங்களில் காற்றை ரசித்தபடி போஸ் கொடுத்துள்ளார். மேலும் கொஞ்சம் டாப் ஆங்கிளில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படமும் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மாளவிகா தான் அழகு: கடற்கரையில் வேறு யாரும் இல்லாத அமைதியான சூழலில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "தனிமையை ரசிக்க மாளவிகா மாலத்தீவுக்கு போயிருக்கிறார் போல", "கடலும் கிளாமரும் போட்டி போடுது", "இயற்கை அழகை விட மாளவிகாதான் அதிகம் கவனம் ஈர்க்கிறார்" என்று கமெண்ட் செக்ஷனில் ஜொள்ளு வடித்து வருகிறார்கள்.

போட்டோஸ் வைரல்: மாளவிகா மோகனன் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக மலையாளத்தில் ஹிருதய பூர்வம் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் தெலுங்கில் ராஜா சாப் படத்தின் மூலம் நேரடியாக அறிமுகம் ஆனார். நடிப்புடன் சேர்த்து ஃபேஷன் மற்றும் டிராவல் புகைப்படங்களாலும் சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள அவர், இந்த புகைப்படங்களாலும் மீண்டும் இணையத்தின் கவனத்தை முழுமையாக தனது பக்கம் திருப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications