“காடுனு ஒன்னு இருந்தா“.. நடுகாட்டில் மாளவிகா.. பதறிய ரசிகர்கள் !
சென்னை : நடிகை மாளவிகா அடர்ந்த நடுகாட்டில் ட்ரெக்கில் சென்றுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கேரளாவை சார்ந்த பிரபல ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் தான் மாளவிகா.
இவர் 2013ம் ஆண்டு வெளியான பட்டம் போலே மலையாள படத்தின் மூலம் மலையாள திரைத்துறையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

மாளவிகா மோகனன்
ஈரான் இயக்குனர் மஜித் மஜீது இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தில் நடித்ததின் மூலம் இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அனைவருக்கும் தெரிந்த முகமானார் மாளவிகா மோகனன். இதையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனும், பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்தில் இந்த கதாபாத்திரம் முக்கியமானதாக இருந்தாலும் அவ்வளவாக பேசப்படவில்லை.

மாறன் படத்தில்
இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்தது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகே மாளவிகா அனைவரின் பேவரைட் ஹீரோயினாக மாறிவிட்டார். மாஸ்டருக்குப் பிறகு தனுஷூடன் இவர் நடித்திருந்த மாறன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது . ஆனால் ,எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ட்ரெக்கில் சென்றுள்ளார்
பார்ப்பதற்கு க்யூட்டாக மெழுகு சிலைபோல இருந்தாலும் பெரிதாக படவாய்ப்பு எதுவும் இல்லை. படவாய்ப்பு இல்லை என்றால் என்ன, சோஷியல் மீடியா இருக்கவே இருக்கு என்று, சோஷியல் மீடியாவில் துடிப்போடும், துள்ளலோடும் இருக்கிறார் மாளவிகா மோகனன். தற்போது, இவர் காட்டுப்பகுதியில் ட்ரெக்கில் சென்றுள்ளார். அந்த அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
6 புலிகள்..3 சிறுத்தை
இதில், கடந்த 3 நாட்களில் 6 புலிகள், 3 சிறுத்தைகளை பார்த்ததாகவும், அவற்றை தனது கேமராவில் தத்ரூபமாக பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, ஆபத்தான அந்த மிருகங்களை அருகில் இருந்து , அந்த போட்டோக்களை எடுத்துள்ளார். மரத்தின் கிளையில் உறங்கிக் கொண்டிருக்கும் சிறுத்தையை தத்ரூபமாக அவர் கேமராவில் க்ளிக் செய்த வீடியோவையும் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மாளவிகா.


Click it and Unblock the Notifications











