லவ் சப்ஜெக்டில் தளபதியோட ஜோடி சேர விரும்பும் பிரபல நடிகை... ரொம்பத்தான் ஆசை!

சென்னை : நடிகர் விஜய் காதலுக்கு மரியாதை செய்தவர். தற்போது அவரை ஆக்ஷன் படங்களிலேயே அதிகமாக பார்க்க முடிகிறது.

அவர் மீண்டும் காதல் கதைகளில் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அவருடன் காதல் கதையில் நடிக்க வேண்டும் என்று பிரபல நடிகை கோரிக்கை வைத்துள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் படம்

விஜய்யின் மாஸ்டர் படம்

நடிகர் விஜய் கோலிவுட்டின் தவிர்க்க முடியாத அங்கமாக விளங்கி வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ஒன்றையொன்று பீட் செய்து வருகின்றன. முன்னதாக இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. படத்தின் பாடல்களும் வேற லெவலாக அமைந்திருந்தது.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

இந்நிலையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் தளபதி. இந்தப் படம் கோடைக் கொண்டாட்டமாக வரும் ஏப்ரலில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அரபிக்குத்து பாடல்

அரபிக்குத்து பாடல்

பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கோடிக்கணக்கில் வியூஸ்களை அள்ளியுள்ளது. லட்சக்கணக்கில் லைக்ஸ்களும் குவிந்து வருகிறது. படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாகியுள்ளார். இந்தப் பாடலில் விஜய்க்கு இணையாக பூஜா ஹெக்டேவின் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மாளவிகா மோகனன் ஆசை

மாளவிகா மோகனன் ஆசை

முன்னதாக மாஸ்டர் படத்தில் ஜோடி சேர்ந்திருந்தார் மாளவிகா மோகனன். அவர் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். தன்னுடைய வாழ்நாள் கனவு பூர்த்தியாகியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் விஜய்யுடன் இணைந்து காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

காதல் படத்தில் விஜய்யுடன் நடிக்க ஆசை

காதல் படத்தில் விஜய்யுடன் நடிக்க ஆசை

காதல் கதை உள்ள படங்களில் விஜய் நடித்து பல நாட்கள் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், விஜய் மீண்டும் காதல் படத்தில் நடிக்க வேண்டும் என்றும் அதில் அவருக்கு தான் ஜோடியாக வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது ஆசையை விஜய் பூர்த்தி செய்வாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ட்விட்டரில் பதில்

ட்விட்டரில் பதில்

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த மாளவிகா மோகனன், தற்போது தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதிலளித்து பேசிய மாளவிகா இவ்வாறு தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X