தங்கலான் தங்கம் மாளவிகா மோகனன்.. அடுத்து யாரு படத்தில் நடிக்கிறாருன்னு பாருங்க.. செம சாய்ஸ்!

சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, பசுபதி நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தில் கிராம தேவதையாக மாளவிகா மோகனன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அந்த படம் திரைக்கு வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி நடித்த வெளியான பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Sardar 2 Thangalaan 2

அடுத்ததாக தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாஸ்டர் ஹீரோயின்: மலையாள திரை உலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான கே.யூ. மோகனனின் மகள்தான் மாளவிகா மோகனன். துல்கர் சல்மான் நடித்த பட்டம்போலே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானாலும் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தான் இவருக்கு கோலிவுட்டில் ஹீரோயின் அந்தஸ்தை பெற்றுத் தந்தது.

கிளாமர் புகைப்படங்கள்: மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்தாலும் அவரது நடிப்பை பலரும் கிண்டல் தான் செய்தனர். அவரது ரியாக்‌ஷனை வைத்து ஏகப்பட்ட ட்ரோல்களும் மீம்களும் பறந்தன. அடுத்து தனுஷுடன் மாளவிகா நடித்த மாறன் திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது. ஆனால், மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ வெளியிட்டாலே ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் அவர் அடுத்த நொடியே டாப் டிரெண்டாகி விடுவார். அந்தளவுக்கு ஓவர் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.

தங்கலானுக்கு வெயிட்டிங்: சியான் விக்ரம் உடன் மாளவிகா மோகனன் தங்கலான் படத்தில் இணைந்து நடித்த நிலையில், அந்த படத்திற்காக எருமை மாட்டின் மீதெல்லாம் ஏறி நடித்தேன் எனக் கூறியுள்ளார். மேலும், இவருக்கு இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் ரொம்ப நாளாகவே இந்த படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். தங்கலான் படம் நிச்சயம் மாளவிகா மோகனனின் நடிப்புக்கு நல்ல தீனிப்போட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்தார் 2வில் மாளவிகா: பிரபாஸின் ராஜாசாப் படத்திலும் இவர் தான் ஹீரோயின் என்கின்றனர். மலையாளம், தமிழ் மற்றும் இந்தியில் பிசியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் தங்கலான் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிப்பை தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

3 ஹீரோயின்கள்: ஏற்கனவே பி.எஸ். மித்ரன் இயக்கிய சர்தார் படத்தில் ரஜிஷா விஜயன் மற்றும் ராஷி கன்னா நடித்திருந்தனர். லைலா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், சர்தார் 2 படத்தில் ரஜிஷா விஜயன் வருவாரா என்பது சந்தேகம் தான் என்கின்றனர். ராஷி கன்னா மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு ஹீரோயினும் இந்த படத்தில் இணையப் போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. விரைவில் அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என தெரிகிறது.

விபத்து: சமீபத்தில், சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தது படக்குழுவினரையும் சினிமா உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்தார் 2 படப்பிடிப்பின் சண்டைக் காட்சிகளில் கூடுதல் கவனமாக படக்குழு அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X