அந்த படத்துல ஸ்ருதிஹாசனுக்கு பதில் நான் தான் நடிக்க வேண்டியது.. மாளவிகா மோகனன் ஓபன் டாக்!
சென்னை: பிரபாஸின் 'தி ராஜாசாப்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நம்ம மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்த பெரிய படத்திலேயே தான் நடிக்க வேண்டியது என்பதை வெளிப்படையாக ஓபன் பண்ணி பேசியுள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான மோகனனின் மகள் தான் மாளவிகா மோகனன். மலையாள திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் அறிமுகமானார்.

ஆனால், அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே மாறினார்.
விஜய் முதல் பிரபாஸ் வரை: நடிகை மாளவிகா மோகனன் துல்கர் சல்மான், ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சியான் விக்ரம், பிரபாஸ் என தொடர்ந்து ஸ்டார் நடிகர்களின் படங்களிலேயே நடித்து தூள் கிளப்பி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளன. வரும் சங்கராந்திக்கு பிரபாஸின் தி ராஜாசாப் படத்தில் செம கிளாமராக நடித்துள்ள மாளவிகா மோகனன் பிரபாஸ் படத்தில் நடித்த அனுபவத்தையும் தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு மிஸ் ஆனது குறித்தும் கூறியுள்ளார்.

பெரிய பட சான்ஸை மிஸ் பண்ணிட்டேன்: தி ராஜாசாப் படத்திற்கு முன்னதாகவே பிரபாஸ் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நிலையில், சலார் படத்தில் நடிப்பதற்காக அந்த படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் சாரே கால் பண்ணினார். ஆனால், அப்போது அந்த படத்தை நான் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அதன் பின்னர், மீண்டும் பிரபாஸ் படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியமாக நினைக்கிறேன் என நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
ஸ்ருதிஹாசனுக்கு அடித்த ஜாக்பாட்: மாளவிகா மோகனன் நோ சொன்ன நிலையில், பிரபாஸின் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்தார். அந்த படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்தது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சலார் படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தால் கூலி படத்திலும் அவருக்கு சான்ஸ் கிடைத்திருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தனுஷின் மாறன் மற்றும் விக்ரமின் தங்கலான் பட வாய்ப்புகளால் தான் மாளவிகா சலார் சான்ஸை மிஸ் பண்ணியுள்ளார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











