இவ்ளோ சீக்கிரம் இது நடக்கும்னு எதிர்பார்க்கல: ரஜினி பற்றிய ஆச்சர்யத்தில் பேட்ட நடிகை
சென்னை: இவ்வளவு சீக்கிரம் ரஜினியுடன் நடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை என்று மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் பேட்ட. மல்டி ஸ்டாரர் படமாக தயாராகிவரும் இப்படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்துடன் ஒரு பிரேமிலாவது வந்துவிட வேண்டுமென்று பல நடிகர் நடிகைகளுக்கும் ஆசை இருக்கும். நம்ம ஊர் த்ரிஷாவுக்கு திரையுலகத்திற்கு வந்து கிட்டதட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தான் அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.
ஆனால், 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமாகி சில படங்களில் நடித்திருக்கும் மாளவிகாவுக்கு இப்படியொரு வாய்ப்பு என்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? அதே மகிழ்ச்சியைத் தான் ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
"ரஜினியுடன் நடிக்க இவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த வாய்ப்புக்கு காரணமான அனைவருக்கும் நன்றிகள். அவருடன் நடித்தது எனக்கு ஆச்சரியமாகவும், மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் பார்த்ததிலேயே அவர் தான் மிக எளிமையானவர்' எனக் கூறியுள்ளார்.
மேலும், தமிழ் தெரியாததால் பக்கத்திலேயே ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக் கொண்டு நடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.


Click it and Unblock the Notifications











