Malavika Mohanan: எனக்கு வெறும் ஒரு டவல் போதும்.. மாளவிகா மோகனன் எதுக்கு இப்படி சொன்னாரு தெரியுமா?

சென்னை: தங்கலான் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் அதிகமாக வொர்க்கவுட் செய்து கணிசமாக தனது உடல் எடையை வெகுவாக குறைத்து வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடைகளிலும், கவர்ச்சி ஆடைகளை அணிந்தும் போட்டோக்களை பதிவிட்டு வரும் மாளவிகா மோகனன் சமீப காலமாக ஜிம்மே கதியென மாறிவிட்டார்.

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக அவர் பதிவிட்டுள்ள போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் மாளவிகா மோகனனா இது? வேறலெவலில் பிளான்க் பண்றாங்களே என வாய் பிளந்துள்ளனர்.

Malavika Mohanan plank workout latest photo stuns fans

ஒல்லியான ஓமணக்குட்டி: கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை மாளவிகா மோகனன் மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் உடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் அந்த படத்துக்காக ஏகப்பட்ட எடையை குறைத்து வருகிறார்.

அதற்காக தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொண்டு தனது ஃபிட்டான உடலுடன் அவர் கொடுக்கும் ஹாட் போஸ்களும் இணையத்தில் இந்த சம்மருக்கு மேலும் சூட்டை கிளப்பி வருகின்றன.

ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்க: ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் மாளவிகா மோகனன் அறிமுகமானாலும் அந்த படத்தில் அவருக்கு பெரிதாக வேலை இல்லை. விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக அழகு பதுமையாக மாளவிகா மோகனன் வந்தாலும், விஜய்யிடம் அவர் கோபமாக கத்திப் பேசும் காட்சிகளை வைத்து டிசைன் டிசைனாக மீம்கள் பறந்தன.

தனுஷின் மாறன் படத்தில் வாயில் பபுள் கம் போட்டுக் கொண்டு சுற்றும் பெண்ணாக மட்டுமே வந்து சென்றார் என பல விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து இருந்தனர். இந்நிலையில், ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்க தங்கலான் படத்தில் சிலம்பம் சண்டையெல்லாம் கற்றுக் கொண்டு கஷ்டப்பட்டு நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan plank workout latest photo stuns fans

வெறும் டவல் போதும்: இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் பிளான்க் செய்யும் போட்டோ ஒன்றை ஷேர் செய்து தனது ஃபிட்னஸ் ரகசியத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், பிளான்க் செய்ய வெறும் ஒரு யோகா மேட்டோ அல்லது ஒரு டவலோ போதும் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

பெரிய ஜிம்மை எல்லாம் தேடிச் செல்லத் தேவையில்லை. அதிகமாக பிளான்க் செய்தாலே நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்றும் வொர்க்கவுட் டிப்ஸையும் கொடுத்திருக்கிறார் நம்ம தங்கலான் தங்கம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X