த்ரிஷா போல நீங்களும்? செய்தியாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான மாளவிகா மோகனன்!
சென்னை: அண்ணா நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மாளவிகா மோகனனிடம் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய் என்னுடைய நெருங்கிய நண்பர். அரசியலுக்கு வருவது அவருடைய நீண்ட நாள் கனவு. அவர் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார். தொடர்ந்த த்ரிஷா பற்றிய கேள்வியால் மாளவிகா கோவமடைந்தார்.
நடிகை மாளவிகா மோகனன்: கலர்ஸ் 0.2 அண்ணா நகரில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு நடிகை மாளவிகா மோகனன் வந்திருந்தார். இதில், கலந்து கொண்டு பேசிய மாளவிகா மோகனன், சென்னை எனக்கு இரண்டாவது சொந்த வீடு போன்றது. இந்த இடத்தில் உங்களை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். அப்போது செய்தியாளர்கள். புதிதாக அமைந்துள்ள விஜய் அரசு இப்போது எப்படி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மாளவிகா, விஜய் என்னுடைய நெருங்கிய நண்பர், அது அவருடைய நீண்ட நாள் கனவு என்பதை நான் அறிவேன். அவர் இவ்வளவு பெரிய வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவருக்காக நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

2 படங்களில் நடிக்கிறேன்: அதைத்தொடர்ந்து ஜென்ஸிகளின் அரசியல் செயல்பாடு இப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே அதைபற்றி நான் என்ன சொல்ல என்று பதில் அளித்தார். மேலும் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அந்த படத்தின் படப்பிடிப்வு விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. அடுத்த மாதம் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என நினைக்கிறேன். அதே போல, கார்த்தியுடன் சர்தார்2 படத்தில் நடித்து வருகிறேன். இந்த இரண்டு படங்களில் விரைவில் வெளியாகும் என்றார். அதைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் விஜய்யின் அரசியல் விழாவிற்கு எல்லாம் த்ரிஷா செல்கிறார். நீங்களும் அவருடன் செல்வீர்களா என்ற கேள்வி, சிரித்துக்கொண்டே என்ன கேள்வி கேட்குறீங்க என பதில் அளித்தார்.
மாஸ்டர் படத்தில்: இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக விஜய் ரசிகர்கள், மாளவிகா மோகனன் பேசிய விதத்தை பாராட்டி வருகின்றனர். விஜயின் அரசியல் பயணம் குறித்து திரையுலகில் இருந்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மாளவிகா மோகனனின் இந்த பேட்டி மேலும் கவனம் ஈர்த்துள்ளது. நடிகை மாளவிகா மோகனன் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் இவர்களின் கூட்டணி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் விஜய் நடித்த விதமும், மாளவிகா மோகனனின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது.


Click it and Unblock the Notifications