கோலிவுட்ல மாளவிகாவுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா... அவங்களே சொல்லியிருக்காங்க பாருங்க!

சென்னை : நடிகை மாளவிகா மோகனன் ரஜினி, விஜய், தனுஷூடன் அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பாலிவுட்டிலும் இவர் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவருக்கு அடுத்ததாக படங்கள் எதுவும் கமிட்டாகவில்லை.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ரசிகர்களின் கேள்விகளுக்கும் தொடர்ந்து பதிலளித்து வருகிறார்.

நடிகை மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் மாடலிங்கில் இருந்து சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். சிறப்பான மாடலாக இருந்த இவர், ரஜினியுடன் பேட்ட படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் சசிக்குமாரின் மனைவியாக நடித்து அசத்தினார். படத்தில் இவரது காட்சிகள் குறைவு என்றாலும் சிறப்பான வரவேற்பை பெற்றார்.

விஜய்யுடன் மாஸ்டர் படம்

விஜய்யுடன் மாஸ்டர் படம்

இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் இணைந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றார். இவருடைய ரசிகர்களின் எண்ணிக்கையும் இதன்மூலம் உயர்ந்தது. படத்தில் விஜய்யுடன் இவரும் பேராசிரியையாக நடித்திருந்தார். மேலும் சீர்த்திருத்தப் பள்ளியின் அவலங்களை விஜய்யின் பார்வைக்கு மாளவிகா கொண்டு செல்வதாக கதை நகரும்.

தனுஷுடன் ஜோடி போட்ட மாளவிகா

தனுஷுடன் ஜோடி போட்ட மாளவிகா

இந்தப் படத்திலும் அவரது கேரக்டரின் காட்சிகள் குறைவு என்றாலும் இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து தனுஷுடன் மாறன் படத்தின் வாய்ப்பையும் பெற்றுத்தந்தது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இவருடைய கேரக்டர் வரவேற்பை பெற்றது.

ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில்

ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில்

தற்போது தமிழில் இவருக்கு புதிதாக எந்தப் படமும் இல்லை. பாலிவுட்டில் சில படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் மாளவிகா மோகனன். தொடர்ந்து தனது கவர்ச்சிப் படங்களை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். ரசிகர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிலளித்து வருகிறார்.

ரசிகர்கள் கேள்விகள்

ரசிகர்கள் கேள்விகள்

இவ்வாறு சமீபத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அதில் தனுஷுடன் படுக்கை காட்சியில் எத்தனை டேக் எடுக்கப்பட்டது, விஜய்யிடம் பிடித்த விஷயம் என்ன மற்றும் மாளவிகா சிறந்த நடிகை இல்லை என்றும் அவரது கவர்ச்சிப் படங்களை பார்க்கவே அவரது பக்கங்களுக்கு ரசிகர்கள் அதிகமாக வருவது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

கவர்ச்சிப்படங்கள் குறித்த கேள்வி

கவர்ச்சிப்படங்கள் குறித்த கேள்வி

இதில் கவர்ச்சிப் படங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த மாளவிகா மோகனன், ரசிகர்கள் தன்னுடைய கவர்ச்சிப் படங்களை பார்க்கத்தான் வருகிறார்கள் என்பது தனக்கு தெரியும் என்றும், அவரும் அதற்காகத்தான் வந்தாரா என்றும் பதில் கேள்வி கேட்டு அந்த ரசிகரை மடக்கினார்.

விஜய்தான் என்னோட ஃபேவரைட்

விஜய்தான் என்னோட ஃபேவரைட்

தொடர்ந்து விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த மாளவிகா விஜய் எப்போதுமே தனக்கு ஸ்பெஷல் என்றும் இதை தான் முன்னதாக பல பேட்டிகளில் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் யாருடன் நடித்தாலும் விஜய்யை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X