பாவம்.. ரிக்ஷா ஓட்டுற அளவுக்கு வந்துட்டாரே தங்கலான் ஹீரோயின்.. மாளவிகா மோகனன் பிக்ஸ்!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் ரிக்ஷா ஒன்றை ஓட்டுவது போல கொடுத்துள்ள போஸ் இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. நடிகைகள் அடிக்கடி குடத்தை எடுத்துக் கொண்டு தண்ணி தூக்கிட்டு வருவது போலவும், சாதாரண வேலைகளை செய்வது போலவும் போட்டோஷூட் எடுத்து வெளியிடுவது வழக்கம்.
ஆனால், மாளவிகா மோகனன் வெளிநாட்டில் பார் ஒன்றுக்கு தனது தோழியுடன் சென்ற நிலையில், அங்கே இருந்த ரிக்ஷாவை பார்த்து விட்டு அதில் ஏறி ஓட்டுவது போல போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த போட்டோக்களை வெளியிட்டு ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி வருகிறார். நெட்டிசன்கள் அந்த புகைப்படங்களை பார்த்து ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.
விஜய் மற்றும் விஜய் ரீல் மகனுடன்: பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுகமான மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். லியோ படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் நடித்த கிறிஸ்டி எனும் மலையாள படத்தில் இவர் தான் ஹீரோயின். உண்மை கதையை தழுவி உருவான அந்த படத்தில் விவாகரத்தான டியூஷன் டீச்சரை 12ம் வகுப்பு மாணவன் காதலிப்பது போல கதை உருவாக்கப்பட்டு இருக்கும். அந்த படத்தில் மாளவிகா மோகனன் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால், படம் தான் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
ரிக்ஷா ஓட்டும் மாளவிகா: ரிக்ஷாக்காரன் படத்தில் ரிக்ஷா ஓட்டி எம்ஜிஆர் சிவாஜிக்கு கிடைக்காத தேசிய விருதை தட்டித் தூக்கினார். இந்நிலையில், வெளிநாட்டில் சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன் ரிக்ஷாவுடன் எடுத்த போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ளார். மேலும், தனது தோழியுடன் பார் ஒன்றுக்கும் சென்ற புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
லேட்டாகும் தங்கலான்: கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு 6 மாதங்கள் ஆகியும் இன்னமும் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் தாமதமாகிக் கொண்டே இருக்கின்றன. அந்த படம் வெளியானால் மாளவிகா மோகனனுக்கு தமிழில் மேலும், சில படங்கள் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நடித்து வரும் மாளவிகா மோகனன் மிக குறைவான வாய்ப்புகளையே பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications