twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிக்கு ஜோடியாகும் மகள் வயது மாளவிகா: அப்போ த்ரிஷா இல்லையா?

    By Siva
    |

    சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்தது. இந்நிலையில் படத்தில் சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    Malavika Mohanan to romance Rajinikanth

    இனிமேல் தன் மகள் வயது பெண்களுடன் டூயட் பாடப் போவது இல்லை என்று ரஜினி காலா இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார். இதையடுத்து சீனியரான சிம்ரன் ஹீரோயினாக ஒப்பந்தமானார்.

    இந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மஜித் மஜிதியின் பியான்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடித்துள்ளார். பியான்ட் தி கிளவுட்ஸ் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியானது.

    மாளவிகா ரஜினியின் மகள்களை விட வயதில் மிகவும் சிறியவர். அப்படி என்றால் ரஜினி காலா இசை வெளியீட்டு விழாவில் சொன்னதை செய்யவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ரஜினி படத்தில் த்ரிஷாவும் இருக்கிறார் என்று கூறப்பட்டது. மாளவிகா ரஜினிக்கு ஜோடி என்றால் அப்போ த்ரிஷா?

    English summary
    Malavika Mohanan is set to romance super senior Rajinikanth in his upcoming movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X