மொரோக்காவிற்கு இன்ப சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன்... உச்சுகொட்டும் ரசிகர்கள்!

சென்னை : மொராக்கோ நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

பிரபலமான திரை குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த மாளவிகா மோகனன்.

இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடித்த பேட்ட படத்தில் நடித்து கோலிவுட்டில் பிரபலமானார்

Malavika mohanans latest instagram post

நடிகை மாளவிகா மோகனன் : பேட்ட படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன், தமிழ், மலையாளம், தெலுங்கு ,இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி படத்தின் நடிகர் மேத்யூ தாமஸ் இணைந்து நடித்திருந்தார். தன்னை விட சிறு வயதுடையவனை சிறுவனை காதலிக்கும் விவகாரமான கதையில் நடித்திருந்தார்.

Malavika mohanans latest instagram post

தங்கலான் : தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் கோலார் தங்க வயல்களில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பீரியட் திரைப்படமான இப்படத்தில் நடிகர் விக்ரம், பார்வதி திருவோடு, பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் பேனரில் தயாரித்து வருகிறார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு : இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்த இப்படத்தின் மீதான எதிர்ப்பு பல மடங்கு அதிகரித்து வந்த நிலையில், விக்ரமனின் பிறந்த நாளுக்கு தங்கலான் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவந்துள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Malavika mohanans latest instagram post

மொராக்கா நாட்டில் : இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் மொராக்கா நாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார். அங்கு விதவிதமான உடையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ள கலர்புல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. மாளவிகாவின் தீவிர ரசிகர்கள் அவரை வர்ணித்து கவிதைபாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X