மோனோகினியில் ரசிகர்களை பதற விடும் மாளவிகா மோகனன்...கேப்ஷன் என்ன போட்டிருக்காரு தெரியுமா?
சென்னை : பிகினியில் தினம் ஒரு போஸ் கொடுத்த போட்டோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து, சோஷியல் மீடியாவையே பதற வைத்து வருகிறார் மாளவிகா மோகனன். லேட்டஸ்டாக மோனோகினியில் படுகவர்ச்சியாக மற்றொரு போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.
பேட்ட, மாஸ்டர் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், தற்போது தனுஷிற்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார். அதோடு யுத்ரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், மலையாளத்தில் பல புதிய படங்களில் நடிக்கவும் மாளவிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

மாலத்தீவில் செம ஜாலி
இந்நிலையில் சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ள மாளவிகா மோகனன், அங்கு செம ஜாலியாக விடுமுறையை கழித்து வருகிறார். அங்கு கடற்கரையிலும், பீச் ரிசாட்டிலும் காற்று வாங்கும் கவர்ச்சி உடையில் ஜாலியாக பொழுதை கழிக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் என தினமும் ஒன்றை வெளியிட்டு வருகிறார்.

பிகினியில் பதற வைத்த மாளவிகா
இவரின் அதீத கவர்ச்சி காட்டும் பிகினி போட்டோ, வீடியோக்களை பார்த்து விட்டு ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். இவரின் அழகையும் பார்த்து பார்த்து புகழ்ந்து வருகின்றனர். முதல் நாளில் மஞ்சள் பிகினியில் முதுகழகை காட்டி அமர்ந்திருக்கும் இரண்டு போட்டோக்களை வெளியிட்டார். இந்த போட்டோக்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து விட்டார்கள் ரசிகர்கள்.

கடல்கன்னியாக மாறிய மாளவிகா
ஆனால் இதை மிஞ்சும் அளவிற்கு அடுத்த நாளே சிவப்பு நிற பிகினியில், கடலில் கடல்கன்னி போல் மிதக்குள் போட்டோவை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பிங்க் பிகினி. இடையில் மினி ஸ்கர்ட்டில் கடற்கரையில் துள்ளி குதித்து விளையாடி, சிப்பிகளை சேகரித்த ஒரு செட் போட்டோக்களையும் பகிர்ந்து ரசிகர்களை அடுத்தடுத்து ஆச்சரியப்பட வைத்தார். இதிலிருந்தே ரசிகர்கள் மீளாத நிலையில், இவை அனைத்தையும் மிஞ்சும் அளவில் மற்றொரு போட்டோவை இன்று பகிர்ந்துள்ளார் மாளவிகா.

அட என்ன இப்படி ஒரு போஸ்
கடல் நீல மோனோகினியில் மொத்த அழகையும் காட்டி, செதுக்கி வைத்த சிலை போல் நின்று போஸ் கொடுத்த 3 போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து வர்ணிக்க வார்த்தைகளோ இல்லாமல் வாயடைத்து போய் உள்ளனர் ரசிகர்கள். அதிலும் அவர் வெளியிட்டுள்ள கேப்ஷனை பார்த்து விட்டு, என்னச்சா மாளவிகாவிற்கு என அனைவரும் கேட்டு வருகின்றனர். Chanel-ing my inner sea spirit??? என கேப்ஷன் போட்டுள்ளார். சோஷியல் மீடியா முழுவதிலும் தற்போது இவரை பற்றிய பேச்சாக தான் உள்ளது.


Click it and Unblock the Notifications











