'யக்கோவ்.. 'மாஸ்டர்' ரிலீஸ் பற்றி தகவல் சொல்லுங்களேன்..' விஜய் ஹீரோயினிடம் கேட்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் விஜய் ஹீரோயினிடம் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தகவலை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், மலையாள நடிகை மாளவிகா மோகனன்.
இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகள் இவர்.

பியான்ட் த கிளவுட்ஸ்
மலையாளத்தில், பட்டம் போலே படத்தில் நடிகையாக அறிமுகமானார் மாளவிகா. இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். பின்னர் நிர்மயாகம், த கிரேட் ஃபாதர் ஆகிய படங்களில் நடித்த அவர், கன்னடப் படங்களிலும் நடித்தார். இதையடுத்து புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய பியான்ட் த கிளவுட்ஸ் என்ற படத்தில் நடித்தார்.

கொரோனா காரணமாக
இதில் இஷான் கட்டார் ஹீரோ. இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இப்போது, விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்த இந்தப் படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இந்திப் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் மாளவிகா.

ரேஸ் பைக் வீடியோ
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா, அடிக்கடி தனது போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன், ரேஸ் பைக்கில் சென்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். நொய்டாவில் உள்ள, சர்வதேச பார்முலா ஒன் டிராக்கில், பைக் ரேஸர்களுடன் பைக் ஓட்டி சென்ற வீடியோ அது. அந்த வீடியோ வைரலானது.

லிப்ஸ்டிக் குறைவு
இந்நிலையில் இப்போது கிளாமர் போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகனன். ஏராளமான லைக்ஸ்களை அள்ளியிருக்கும் இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் கண்டபடி கமென்ட் அடித்துள்ளனர். ஒருவர், லிப்ஸ்டிக் கம்மி பண்ணிக்கோங்க. அடிக்கிற மாதிரி இருக்கு' என்று தெரிவித்துள்ளார்.

வேற லெவல் கெத்து
சில ரசிகர்கள், மாஸ்டர் ரிலீஸ் பற்றி நீங்களாவது தகவல் சொல்லுங்களேன் என்று கேட்டுள்ளனர். 'போட்டோ மரணம். மாசு மரணமாயிருக்கே என்று சிலரும், என்ன சிம்ரன் இதெல்லாம்? இப்படியோ லிப்ஸ்டிக் போடறது? என்று சிலரும் கூறியுள்ளனர். நீங்க எப்பவும் கெத்து, தளபதி கூட நடிச்சதால, இப்ப வேற லெவல் கெத்து என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

ரசிகர் மன்றம்
அந்த கண்களை பார்த்த பிறகு, ரசிகன் ஆகாம இருக்க முடியுமா? என்று ஒரு நெட்டிசன் கேட்டுள்ளார். இன்னும் சிலர் தேவதைகள் எப்போதும் தேவதைகளாகவே இருக்கிறார்கள் என்றும், இயற்கை அழகுதான் எல்லாத்தையும் விட அழகு என்றும் கூறியுள்ளனர். ஒரு நெட்டிசன், ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன், உங்க பதிலை சொல்லுங்க என்று கேட்டுள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











