கவர்ச்சி கட்டுவதில் என்ன தப்பு.. நான் அப்படித்தான் பண்ணுவேன்..மாளவிகா மோகனன்!

சென்னை: மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், சில வருடங்கள் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார். தமிழில் இவர் ரஜினிகாந்த் நடித்த ‛பேட்ட', தனஷுடன் மாறன், விஜய்யின் ‛மாஸ்டர்' என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தென்னிந்திய அளவில் பிரபலமானார். பெரிய நடிகர்களின் படத்தில் நடித்தாலும் மாஸ்டர் படத்திற்கு பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்கும் வாய்ப்பு வரவில்லை. அதை தொடர்ந்து கடந்த வருடம் வெளியான ‛தங்கலான்' படத்தின் மூலம் மீண்டும் ஃபாமுக்கு வந்து இருக்கிறார் நடிகை மாளவிகா மோகன்.

அந்த வகையில் தற்போது தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக ‛ராஜா சாப்' படத்தில் நடித்துள்ளார்.
திகில் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து, மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ‛ஹிருதயபூர்வம்' என்கிற படத்திலும் நடித்து முடித்துவிட்டார். தமிழில் மித்ரன் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ‛சர்தார் 2' படத்தில் நடித்து உள்ளார். சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடிய இவர், ‛‛சர்தார் 2 படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார். தமிழில் அடுத்து நான் நடிக்கும் படம் குறித்து அதன் பிறகு அறிவிக்கிறேன என்றார்.

Malavika Mohanan interview
Photo Credit:

கவர்ச்சி கட்டுவதில் என்ன தப்பு: இதைத்தொடர்ந்து, மாளவிகாவிடம் சமூகவலைகளில் அடிக்கடி கவர்ச்சி படங்களை ஏன் வெளியிடுகிறீர்கள், படவாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா என ஒரு ரசிகர் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள மாளவிகா, கவர்ச்சி படங்களை வெளியிடுவதில் என்ன தவறு இருக்கிறது. இந்த காலத்து டிரெண்டுக்கு ஏற்றபடி நான் மாறி இருக்கிறேன். இப்போது இருப்பவர்கள் அனைவரும் கவர்ச்சி போட்டோவை ரசித்து பார்க்கிறார்கள், அவர்களுக்காக நான் வெளியிடுகிறேன். இதில் உங்களுக்கு என்ன வெறுப்பு, கவர்ச்சி காட்டுவது என்னுடைய விருப்பம் என்று பதில் அளித்துள்ளார். அண்மையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திரைப்படத் துறையில் ஆண் என்றால் ஒரு மாதியும், பெண் என்ற மாதிரி பார்க்கும் போக்கு ஆழமாக வேரூன்றி விட்டது, இது எப்போது முடிவுக்கு வரப்போகிறது என்று தெரியவில்லை. ஆண்கள் உண்மையிலேயே புத்திசாலிகளாகிவிட்டார்கள் என்றார்.

More from Filmibeat

Read more about: malavika mohanan interview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X