Malavika Mohanan about Vijay: விஜய் பற்றி கேட்ட ரசிகர்.. மாளவிகா மோகனன் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: சியான் விக்ரம் உடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்து முடித்து டப்பிங் எல்லாம் பேசி விட்ட மாளவிகா மோகனன் படத்தின் ரிலீஸுக்காக ஏப்ரல் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அடுத்து மாருதி இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ராஜாசாப் படத்தில் இணைந்து விட்ட நிலையில், எந்தவொரு கவலையும் இல்லாமல் படுஜாலியாக இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று திடீரென ரசிகர்களுடன் சில நேரம் ட்விட்டரில் கேள்வி பதில் நேரத்தை செலவிட்டு இருந்தார்.

அதில், விஜய் ரசிகர்கள் பலர் மாளவிகா மோகனனிடம் மாஸ்டர் பட அனுபவங்களையும் தளபதி விஜய் பற்றியும் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்கள் எல்லாம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Malavika Mohanan says Vijay is her Mentor and Good Friend in a recent fans chat

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி தேவதை: திரைப்படங்களில் கூட மாளவிகா மோகனன் காட்டாத தாராள கவர்ச்சியை இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு இம்சை படுத்தி வருகிறார். சமீபத்தில் பரந்த மனசுடன் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தின் டெம்பரேச்சரை எக்கச்சக்கமாக எகிற வைத்தது. இந்நிலையில், ரசிகர்களுடன் கலந்துரையாடிய மாளவிகா மோகனன் பல கேள்விகளுக்கு பளிச்சென பதில் அளித்தார்.

பிரபாஸ் பட வாய்ப்பு: சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ஸ்ருதிஹாசனுக்கு கிடைத்த நிலையில், ராஜாசாப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகை மாளவிகா மோகனனுக்கு கிடைத்துள்ளது. அந்த படம் வேற லெவலில் உருவாகி வருவதாகவும் பிரபாஸ் நடிப்பு வேறலெவல் என்றும் பிரபாஸ் ரசிகர்கள் கேள்விக்கு மாளவிகா மோகனன் பதில் அளித்தார்.

விஜய் பற்றிய கேள்வி: தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்த நிலையில், தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் பற்றி சொல்லுங்க என ரசிகர் ஒருவர் கேட்க, விஜய் எனக்கு ஒரு நல்ல ஆலோசகர் மற்றும் நண்பர் என கமெண்ட் போட்டுள்ளார். அதை பார்த்த விஜய் ரசிகர்கள் மாளவிகா மோகனனுக்கு ஏகப்பட்ட லைக்குகளை குவித்துள்ளனர்.

பிடிச்ச விளையாட்டு வீரர்: மேலும், உங்களுக்கு பிடிச்ச விளையாட்டு வீரர் யார் என கேட்ட கேள்விக்கும் பிகில் என பதில் அளித்த மாளவிகா மோகனன் கிரிக்கெட்டில் விராத் கோலியை பிடிக்கும் என கமெண்ட் போட்டுள்ளார். தங்கலான் படத்துக்கு பிறகு தமிழில் நடித்தால் மீண்டும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X