மாலத்தீவில் மல்லாக்கப் படுத்து நீச்சல் அடிக்கும் மாளவிகா மோகனன்.. ஒரே பிகினி கலெக்ஷனா இருக்கே!
சென்னை: தனுஷின் மாறன் படம் விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் மாலத்தீவில் மஜா பண்ணும் புகைப்படங்களை ஷேர் செய்து இணையத்தை சூடாக்கி வருகிறார்.
மலையாள ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகள் தான் மாளவிகா மோகனன். மலையாள சினிமாவில் அறிமுகமான மாளவிகா தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.
கவர்ச்சி பொங்க ஏகப்பட்ட போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மாஸ்டர் ஹீரோயின்
ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் ஹீரோயின் ரோல் கிடைக்காத வருத்தத்தில் இருந்த மாளவிகா மோகனனுக்கு தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் அந்தக் குறை தீர்ந்தது. கல்லூரி ஆசிரியர் கதாபாத்திரத்தில் செம க்யூட்டாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். அந்த கண்ண பார்த்தாக்கா பாடலை பாடி ரசிகர்கள் மாளவிகாவை ரசித்து வந்தனர்.

மாறன் படத்திலும்
விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள தனுஷின் மாறன் திரைப்படத்திலும் மாளவிகா மோகனன் தான் ஹீரோயின். இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தின் பொல்லாத உலகம் பாடல் வெளியாகி பல மில்லியன் பார்வைகளை குவித்து வருகிறது. தியேட்டரில் வெளியாகாமல் ஒடிடியில் வெளியாவது தனுஷ் ரசிகர்களுக்கு சிறிய மன வருத்தத்தை கொடுத்துள்ளது.

மாலத்தீவில் மாளவிகா
மாறன் படத்தைத் தொடர்ந்து யுத்ரா எனும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். இந்நிலையில், ஹாலிடேவை கொண்டாட தற்போது மாலத்தீவுக்கு விசிட் அடித்துள்ளார். அங்கே அவர் பிகினி உடைகளில் எடுத்துத் தள்ளும் படு கவர்ச்சியான புகைப்படங்களை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

மல்லாக்க படுத்தபடி
கடல் அருகே ஒட்டியபடி அமைந்திருக்கும் நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்து நீச்சல் அடித்தபடி தற்போது மாளவிகா மோகனன் பிகினி உடையில் படு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தின் வெப்பத்தை மேலும் அதிகரித்துள்ளார். பல ஆயிரக் கணக்கான லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

அதிகரிக்கும் ஃபாலோயர்ஸ்
தொடர்ந்து ஏகப்பட்ட பிகினி புகைப்படங்களையும் கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களையும் ஷேர் செய்து வரும் நடிகை மாளவிகா மோகனன் 1.5 மில்லியன் ரசிகர்களில் இருந்து தற்போது 3 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை தனது ஃபாலோயர்களாக சில மாதங்களிலேயே சேர்த்து விட்டார். மாறன் படம் வெளியான பின்னர் மேலும், பல மில்லியன் ஃபாலோயர்கள் இந்த மலையாள மங்கையை பின் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











