ஓஹோ இதுதான் எக்ஸ் தள பதிவோ.. மாளவிகா மோகனனின் ரீசென்ட் போஸ்ட்.. எப்படி இருக்குன்னு பாருங்க!

சென்னை: தங்கலான் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனாலும் தமிழ்நாட்டு ரசிகர்களை சந்தோச படுத்துவதை எப்போதுமே தள்ளிப் போட மாட்டேன் என நடிகை மாளவிகா மோகனன் தாறுமாறு கவர்ச்சி உடையணிந்து லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் நாயகி ரெட் கலர் எக்ஸ் வடிவ உடை அணிந்து கொண்டு எக்ஸ் தளத்தில் போட்டோக்களை அடுக்கிய நிலையில், ஓஹோ இதுதான் எக்ஸ் தள பதிவோ என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கேரளத்து அழகி: பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஆடுஜீவிதம் படத்தின் ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகள் தான் மாளவிகா மோகனன். மலையாளத் துறை உலகின் முன்னணி ஒளிப்பதிவாளராக அப்பா வளம் வரும் நிலையில் பான் இந்தியா நடிகையாக மாளவிகா மோகனன் மாஸ் காட்டி வருகிறார்.

Malavika Mohanan shares her christmas dress with wishes and fans pouring their hearts

பேட்ட முதல் தங்கலான் வரை: துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அறிமுகமான மாளவிகா மோகனன் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்துக்கு விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும், தனுஷின் மாறன் படத்திலும் நடித்த மாளவிகா மோகனன் ஹிந்தியில் சில படங்கள் நடித்த நிலையில், சியான் விக்ரமுடன் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.

எக்ஸ் டிசைன்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிகப்பு நிற உடையில் ஜொலி ஜொலிக்கும் மாளவிகா மோகனனின் கழுத்து டிசைனில் எக்ஸ் மாதிரியான வடிவம் இருப்பதை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் அவர் பதிவிட்ட போட்டோக்களை பார்த்து இதுதான் சரியான எக்ஸ் தள பதிவு என வர்ணித்து வருகின்றனர். மேலும், தலைவி என்றும் தங்கம் என்றும் கார்ஜியஸ் என்றும் அழகே பொறாமைப்படும் பேரழகி என்றெல்லாம் பதிவுகள் குவிகின்றன.

தங்கலானுக்கு வெயிட்டிங்: இந்த ஆண்டே பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தங்களால் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு ஜனவர் 25ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் வெளியான தகவல்களில் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிப்போகும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X