மீண்டும் 'அப்படி' ஒரு போட்டோவை ஷேர் செய்த மாஸ்டர் ஹீரோயின்.. ஃபேன்ஸ் கேட்ட கேள்விய பாருங்க!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் மீண்டும் செம கிளாமரான போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார்.
Recommended Video
மலையாள நடிகையான மாளவிகா மோகனன், மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழிகளில் நடித்தார். தமிழில் நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
அதில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். இதனை தொடர்ந்து விஜயின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மாஸ்டர் ஹீரோயின்
கடந்த மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய இப்படம், லாக்டவுன் காரணமாக இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. தற்போது தெலுங்கில் ஹீரோ என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார் மாளவிகா மோகனன்.

கிளாமர் போட்டோக்கள்
லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் நடிகை மாளவிகா மோகனன், டிவிட்டர் இன்ஸ்டாகிராம் என நேரத்தை கழித்து வருகிறார். தொடர்ந்து கவர்ச்சி நடிகைகளுக்கு போட்டியாக தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஸ்ட்ராப்லெஸ் டாப்
இந்நிலையில் இன்று அட்டைப்படத்திற்கு நடத்திய போட்டோ ஷுட்டின் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில் மார்பு வரை மட்டுமே உள்ள பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸை அணிந்துள்ளார்.

பொண்ணு பார்க்க வரவா
கண்களில் கவர்ச்சி ததும்ப ததும்ப செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார். அதனை பார்த்த நெட்டிசன்கள், உங்களை பொண்ணு பார்க்க வரவா என கேட்டு ஷாக் கொடுத்துள்ளனர். மாளவிகா மோகனனின் இந்த போட்டோவை இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நெட்டிசன்கள் லைக் செய்துள்ளனர்.

சமைப்பதுதான் வேலையா?
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் ரசிகர் ஒருவர் மாஸ்டர் டீம் குவாரண்டைன் டைம் என ஒரு கார்ட்டூன் போஸ்டரை ஷேர் செய்திருந்தனர். அதில் அனைவரும் விளையாடுவது, அப்படி இப்படி என அவரவர் வேலையை செய்ய மாளவிகா மோகனன் சமைப்பது போன்று இருந்தது.

ஹேப்பியான நடிகை
இதனை பார்த்து கடுப்பான மாளவிகா மோகனன், பெண்கள் சமையல் செய்ய மட்டும் தானா என்று கேட்டு கோபமாக டிவிட்டினார். இதனை தொடர்ந்து கரெக்ஷன் செய்யப்பட்ட கார்ட்டூனை வெளியிட்டார் விஜயின் ரசிகர். அதனை பார்த்து பின்னர்தான் கோபம் தணிந்து சாந்தமானார் மாளவிகா மேகனன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











