Malavika Mohanan: நீச்சல் குளத்தில் ஹாயாக புக் படிக்கும் மாளவிகா மோகனன்.. தங்கலான் ஆரத்தி செம அழகு!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், தங்கலான் படக்குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், ரெசார்ட் ஒன்றில் தனது பிறந்தநாளை நீச்சல் உடையில் கொண்டாடிய போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் தங்கலான் பட நடிகை.

நீச்சல் குளத்திலும் புக் படிக்கும் அழகே தனி அழகு என ரசிகர்கள் கமெண்ட் போட்டு ஆரத்தியின் அழகை ஆராதனை செய்து வருகின்றனர்.
நீச்சல் குளத்தில் மாளவிகா மோகனன்: பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து விரைவில் தங்கலான் படம் மூலம் மீண்டும் கோலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்த காத்திருக்கும் மாளவிகா மோகனன் தனது பர்த்டே பார்ட்டியை வெளிநாட்டில் உள்ள ரெசார்ட் ஒன்றில் கொண்டாடி வருகிறார்.

எலுமிச்சை நிற நீச்சல் உடையை அணிந்து கொண்டு மாளவிகா மோகனன் நீச்சல் குளம் அருகே கொடுத்துள்ள செம கூலான புகைப்படங்கள் இளைஞர்களின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
அங்கேயும் புக் படிக்கிறாங்களே: புத்தக பிரியையான மாளவிகா மோகனன் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் காட்சி தந்த போதிலும் அங்கேயும் சின்சியராக புக் படிக்கும் போட்டோவை போட்டு தான் ஒரு புத்தகப்பிரியை என்பதை நிரூபித்து இருக்கிறார்.

ஏற்கனவே மாஸ்டர் படம் வெளியான சமயத்தில் மாளவிகா மோகனன் கையில் கரண்டியை கொடுத்து கிச்சனில் நிக்க வைத்தது போன்ற எடிட்டுக்கு எதிர்வினையாற்றும் போது உடனடியாக அவரது கையில் புக் கொடுத்து அந்த எடிட்டை மாற்றியிருந்தனர்.
செம அழகு ஆரத்தி: தங்கலான் படத்தில் ஆரத்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனனை இந்த கோலத்தில் பார்த்த ரசிகர்கள் செம அழகு ஆரத்தி என வர்ணித்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், லெஜண்டுகள் இந்த போட்டோக்களை ஜூம் பண்ணி பார்த்து விடுவார்கள் என்கிற டபுள் மீனிங் கமெண்ட்டுகளும் இன்ஸ்டாகிராமில் வெளியான மாளவிகா மோகனனின் இந்த போட்டோக்களை அதிகளவில் ஷேர் செய்ய காரணமாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications











