தங்கலான் தங்கத்துக்கு எவ்ளோ பெரிய தாராள மனசு.. இந்தி பட புரமோஷனிலேயே மாளவிகா மோகனன் கிளாமர் அள்ளுதே!
மும்பை: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி நடித்த தங்கலான் படத்தில் ஆரத்தி எனும் தங்கத்தை பாதுகாக்கும் தேவதையாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். எருமை மாட்டின் மீது ஏறி சண்டை போடுவது, சிலம்பம் வைத்து சண்டை போடுவது என மாஸ் காட்டியிருந்தார்.
தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை கடந்த தங்கலான் திரைப்படம் இந்தியிலும் இந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் மீண்டும் பாலிவுட் ரசிகர்களுக்கு மாளவிகா மோகனனின் தரிசனம் கிடைக்கப் போகிறது.

வரும் செப்டம்பர் 20ம் தேதி மாளவிகா மோகனன், சித்தாந்த் சதுர்வேதி நடிப்பில் உருவாகி உள்ள யுத்ரா திரைப்படம் வெளியாகிறது. அந்த படத்தின் புரமோஷனுக்காக ஓவர் கிளாமரில் தாராள மனசுடன் மாளவிகா மோகனன் புரமோஷன் செய்து வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
மலையாள நடிகை: மலையாள ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகளான மாளவிகா மோகனன் துல்கர் சல்மானின் பட்டம்போலே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர், தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். தனுஷ் உடன் மாறன், சியான் விக்ரமின் தங்கலான் என தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த வார ரிலீஸ்: தங்கலான் திரைப்படத்தின் மூலம் இந்தியளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள மாளவிகா மோகனன் யுத்ரா படத்தை ரொம்பவே நம்பிக் கொண்டிருக்கிறார். படுகவர்ச்சியாகவும் ஃபைட்டர் படத்தில் தீபிகா படுகோன் நடித்ததை விட பிகினி உடையில் எக்ஸ்ட்ரா கிளாமர் அழகையும் பாலிவுட் ஹீரோவுடன் லிப் லாக் முத்தக் காட்சிகளிலும் நடித்து இளைஞர்களை பெருமூச்சு விட வைத்திருக்கிறார். இந்த வாரம் யுத்ரா படம் வெளியாகும் நிலையில், தீவிரமாக பல்வேறு இடங்களுக்கு சென்று புரமோஷன் செய்து வரும் மாளவிகா மோகனன் மும்பையிலேயே முகாமிட்டுள்ளார்.
கண்ட இடத்துல காத்து வாங்குதே: மாளவிகா மோகனன் ஏற்கனவே நடைபெற்ற யுத்ரா படத்தின் புரமோஷனில் தனது உடையை சரி செய்த காட்சியே இணையத்தில் தீயாக பரவி பல இளைஞர்களுக்கு ஜுரத்தை வரவழைத்து விட்டது. இந்நிலையில், தற்போது ஏகப்பட்ட இடங்களில் கட் வைத்துள்ள கருப்பு நிற கவர்ச்சி ஆடையை அணிந்துக் கொண்டு புரமோஷன் செய்துள்ள மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











