மாம்பழமாக மாறிய மாளவிகா மோகனன்.. மலைத்துப் போன ரசிகர்கள்.. அந்த கண்ண எப்போ பார்க்கப் போறோமோ?

சென்னை: மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன், மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமா மட்டுமின்றி மாடலிங் துறையிலும் கலக்கி வருகிறார் இந்த மலையாள பியூட்டி.

புதுசா இப்போ விளம்பரம் ஒன்றிற்காக கொடுத்த போஸில் அப்படியே மாம்பழமாகவே மாறியுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கேரளத்து மாம்பழம்

கேரளத்து மாம்பழம்

சேலத்து மாம்பழம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், இது கேரளத்து மாம்பழம். மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனனின் அட்டகாசமான புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி இளைஞர்களின் இதயங்களை ஜூஸ் போட்டு வருகிறது.

ஷூ விளம்பரம்

ஷூ விளம்பரம்

Skechers India என்கிற ஷூ கம்பெனியின் புது மாடல் ஷூவை அறிமுகப்படுத்தும் விளம்பரத்திற்காக மாளவிகா மோகனன் கொடுத்துள்ள போஸ் தான் இது. உடல் முழுக்க மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு, கால்களில் வெள்ளை நிறத்தில் பிரம்மாண்டமான ஷூவை அணிந்து அதற்காகத் தான் போஸ் கொடுத்துள்ளார்.

ஒன் சைடு

ஒன் சைடு

கச்சிதமான அழகுடன் ஒரு பக்கம் கிராஸ் ஸ்லீவ் அணிந்து கொண்டு ஃபேஷன் ஸ்டேட்மெண்ட்டாக உடை அணிந்து கவர்ச்சி பிளம்பாக மாறி இருக்கும் மாளவிகா மோகனனை பார்த்த ரசிகர்கள், லைக் பட்டனை கொன்று குவித்து வருகின்றனர். அதிதி பாலன் உள்ளிட்ட நடிகைகளும் இந்த புகைப்படத்திற்கு லைக் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கன்னத்தில் முத்தம்

கன்னத்தில் முத்தம்

சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு நபருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் தீயாய் பரவியது. அவர் வேறு யாருமில்லை நடிகை மாளவிகா மோகனனின் சகோதரர் ஆதித்யா மோகனன் தான். சகோதரரின் பிறந்தநாளை முன்னிட்டு மாளவிகா முத்தம் கொடுத்த புகைப்படம் டிரெண்டான நிலையில், தற்போது இந்த ஷூ விளம்பர போட்டோவும் வைரலாகி வருகிறது.

தனுஷ் படம்

தனுஷ் படம்

நடிகர் தனுஷின் D43 படத்தில் நாயகியாக நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், சமீபத்தில், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. மேலும், பாலிவுட்டில் நடிகர் ஷாகித் கபூர் உடன் வெப்சீரிஸ் ஒன்றிலும் மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அந்த கண்ண பார்க்க

அந்த கண்ண பார்க்க

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வரும் தீபாவளிக்கு வரும் என வழக்கம் போல் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்துள்ள மாளவிகா மோகனனின் அந்த கண்ண பார்த்தாக்கா வீடியோ பாடலையும், படத்தையும் பொங்கலுக்காவது தியேட்டரில் பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X