ப்ளூ மார்னிங் மேடம்.. செம ஷைனிங்கா இருக்காரே மாளவிகா மோகனன்.. ஹார்ட் பீட்டு எகிறுது!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளன. துல்கர் சல்மான் நடித்த பட்டம்போலே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்த மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார் நடித்த பேட்ட படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
மலையாளத் துறை உலகின் முன்னணி ஒலிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகள்தான் மாளவிகா மோகனன். பேரழகியான இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். மாஸ்டர் படத்தின் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களாக மாறினர்.

அடுத்து தனுஷ் நடித்த மாறன் படத்தில் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் சியான் விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் குயின்: மாளவிகா மோகனன் நடிப்பு ரசிகர்களை கவர்ந்ததை விட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளன. அடிக்கடி படு கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். மாளவிகா மோகனன் அடுத்ததாக பிரபாஸ் நடித்த உள்ள ராஜாசாப் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்கலான் ரிலீஸ் தாமதம் மற்றும் பிரபாஸ் படம் ஆரம்பிப்பதற்கு லேட் ஆகி வரும் நிலையில், பெரிதாக மற்ற படங்களின் கமிட்டாகாமல் மாளவிகா மோகனன் இருந்து வருவதாக கூறுகின்றனர்.

ப்ளூ கலர் ஷைனிங் டிரஸ்: முதல் தற்போதைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அவர் நீல நிறத்திலான ஷைனிங் உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்து வருகிறார். ஒன் சைடு ஓப்பனாக உள்ள டிசைனை பார்த்து ரசிகர்கள் சொக்கிப் போய் உள்ளனர். அடிக்கடி இப்படி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்ந்து டச்சில் இருந்து வருகிறார்.

தங்கலான் தாமதம்: ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தில் சியான் விக்ரம் நடித்து முடித்த தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நல்ல ரிலீஸ் தேதியை பார்த்துக் கொண்டே 6 மாதங்களை வீணடித்து விட்டனர். சியான் விக்ரம் வீர தீர சூரன் படத்தின் 2 பாகங்களிலேயே நடித்து ரிலீஸ் செய்து விடுவார் போல தெரிகிறது. அவரது துருவ நட்சத்திரம் ரிலீஸாகாமல் கிடப்பதை போல இந்த படம் ஆகி விடக் கூடாது என ரசிகர்கள் வேண்டிக் கொள்கின்றனர். கடின உழைப்பை போட்டு சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











