Malavika Mohanan: ஆறடி வளர்ந்த ஆரஞ்சு பழம்போல இருக்காரே.. மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்!

சென்னை: பிரபாஸின் சலார் படத்தை தியேட்டரில் சென்று பார்த்த நடிகை மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். இந்நிலையில், தற்போது ஆரஞ்சு நிற கவர்ச்சி உடையில் பக்கா போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளார். தமிழில் தங்கலான் படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்திருக்கும் மாளவிகா மோகனன் அடுத்ததாக பிரபாஸின் மாருதி படத்தில் நடிக்க உள்ளார்.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். அவரது அழகில் ஏகப்பட்ட ரசிகர்கள் சொக்கிப் போய் கிடக்கின்றனர். இந்தியளவில் எக்கச்சக்க ரசிகர்கள் மாளவிகா மோகனனுக்கு ஃபாலோயர்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர்.

Malavika Mohanan stunning orange outfit latest pics trending in social media

மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்: அந்த கேரளா ஃபிளாவர் கலந்தாலே நடிகைகளிடம் அதிகளவிலான கவர்ச்சி நெடி தூக்கலாகவே இருக்கும். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பல நடிகைகள் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில், பேட்ட படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்த மாளவிகா மோகனன் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் ஜோடி போட்டு நடித்தார். இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிடும் போட்டோக்களுக்கு மட்டுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளன.

ஆறடி உயர ஆரஞ்சு பழம்: கண்ட மேனிக்கு கவர்ச்சி காட்டி அடுத்தடுத்து இந்தியளவில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி வருகிறார் மாளவிகா மோகனன். பாலிவுட்டில் அனிமல் 2, டோலிவுட்டில் மாருதி மற்றும் தமிழில் தங்கலான் என கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார் மாளவிகா மோகனன் எனக் கூறுகின்றனர். இந்நிலையில், ஆளுயர ஆரஞ்சு பழம் போல அப்படியொரு காட்டுவாசி லுக்கில் கலக்கல் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

ஜொள்ளு விடும் ரசிகர்கள்: வித விதமான போட்டோக்களை போட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறார் மாளவிகா மோகனன். தற்போது தோலுரித்த ஆரஞ்சு பழம் போல காட்டுத்தன கவர்ச்சியை காட்டி இளைஞர்களின் தூக்கத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து வருகிறார். மாளவிகா மோகனனின் அழகை ரசிகர்கள் ஆராதித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X