ஹரி இயக்கும் அதிரடி ஆக்ஷன் படம்... நடிகர் சூர்யா ஜோடியாகிறாரா விஜய்யின் மாஸ்டர் பட ஹீரோயின்?
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் அடுத்து சூர்யா ஜோடியாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மலையாளத்தில், பட்டம் போலே படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடித்திருந்தார்.
Recommended Video
பின்னர் மலையாளத்தில் நிர்மயாகம், த கிரேட் ஃபாதர் படங்களில் நடித்த இவர், கன்னடத்திலும் நடித்தார்.

மஜித் மஜிதி படத்தில்
இந்தியில் பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய இந்தி படமான பியான்ட் த கிளவுட்ஸ் படத்தில் இஷான் கட்டார் ஜோடியாக நடித்தார். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான மாளவிகா மோகனன், தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படம் மூலம் அறிமுகமானவர்.

விஜய் ஜோடியாக
சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். அனிருத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் மூலம் மாளவிகா மோகனன் கவனிக்கப்பட்டார். இதையடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார். இதை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா, ஸ்ரீநாத், ஸ்ரீமன் என பலர் நடித்து வருகின்றனர்.

நான்காம் பாகம்
இந்தப் படத்தில் மாளவிகாவும் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் சூர்யா ஜோடியாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை ஹரி இயக்குகிறார். இது சிங்கம் படத்தின் நான்காவது பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சுரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்து ஹரி படத்தில் நடிக்கிறார்.

ஹரி விளக்கம்
சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனனை, இயக்குனர் ஹரி சென்னையில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது படத்தில் அவரது கேரக்டர் பற்றி ஹரி விளக்கியதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் உறுதிச் செய்யப்படவில்லையாம். அடுத்த மாத இறுதியில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











