தமிழ் ரசிகர்களின் மனம் பறிக்க இதோ இன்னும் ஒரு மாளவிகா...!
வெத்து வேட்டு.. படத்தின் பெயர் சற்று ரஃப்பாக இருந்தாலும், படத்தில் தென்றல் போல ஒரு ஹீரோயினை களம் இறக்கியுள்ளனர்.
ஹரீஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் மாளவிகா மேனன். கேரளத்திலிருந்து வந்துள்ள இன்னொரு மேனன் நடிகை இவர்.
எஸ்.குமார், ஏ.ராமசாமி, டி.சரவணமாணிக்கம், ஆர்.மூர்த்தி, ஏ.லட்சுமணன் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

கோரிப்பாளையம் ஹரீஷ்
இந்த படத்தில் கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், மாத்தியோசி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

விழா நாயகி மாளவிகா மேனன்
கதாநாயகியாக விழா பட நாயகி மாளவிகா மேனன் நடிக்கிறார். சைடில் பார்த்தால் இவர் அப்படியே பழைய பாபிலோனா போலவே இருக்கிறார்.

"சின்ன சில்க்" உமா
இளவரசு, கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணா, சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக் பாண்டி, கோபால், மணி, மாக்கான், கிரேன் மனோகர், போண்டாமணி, வெங்கல்ராவ், சின்னசில்க் உமா, நந்தகுமார், கம்பம் மீனா, நாஞ்சில் சரண் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இயக்குநர் மணிபாரதி
படம் பற்றி இயக்குனர் மணிபாரதி கூறுகையில், நான் திருப்பதிசாமி, ராஜா, பாலாஜி.கே.குமார் போன்றவர்களிடம் உதவியாளராக இருந்திருக்கிறேன். கஸ்தூரி, அத்திப்பூகள் போன்ற சின்னத்திரை தொடர்களிலும் பணியாற்றி இருக்கிறேன். அத்துடன் ஏழு குறும்படங்களையும் இயக்கி இருக்கிறேன்.

இப்படித்தான்.. அது காதல் அல்ல
இப்படிதான் இருக்க வேண்டும் என்பது காதல் அல்ல..எப்படி இருந்தாலும் காதல் காதல் தான் என்கிற சின்ன கருத்தை வைத்து கமர்ஷியலாக படமாக்கி இருக்கிறோம்.

கனகச்சிதமாக பொருந்திய மாளவிகா
கதாப்பாத்திரத்திற்கேற்ப ஹரீஷ் - மாளவிகாமேனன் இருவரும் கனகச்சிதமாக பொருந்தி போயினர். ஒவ்வொரு கதாப்பாதிரமும் பேசப்படும் படமாக இது இருக்கும்.

திருச்சி- பொள்ளாச்சி
படப்பிடிப்பு திருச்சி, பொள்ளாச்சி, கேரளா பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது என்றார் மணிபாரதி.


Click it and Unblock the Notifications











