அந்த காற்றும், மழையும்.. லடாக்கில் பைக் ஓட்டிய அனுபவம்.. 'மாஸ்டர்' ஹீரோயின் திரில்.. அமலா பால் ஆசை!
சென்னை: லடாக்கில் பைக் ஓட்டிய அனுபவம் திரில்லானது என்று மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். சசிகுமார், விஜய் சேதுபதி, நவாஸூதின் சித்திக் உள்பட பலர் நடித்திருந்தனர்.

த கிரேட் ஃபாதர்
பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான மாளவிகா, மலையாளத்தில், பட்டம் போலே படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். பின்னர் மலையாளத்தில் நிர்மயாகம், த கிரேட் ஃபாதர் ஆகிய படங்களில் நடித்த அவர், கன்னடப் படங்களிலும் நடித்தார்.

நயன்தாரா சாயல்
இதையடுத்து புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய பியான்ட் த கிளவுட்ஸ் என்ற படத்தில் நடித்தார். இதில் இஷான் கட்டார் ஹீரோ. இந்தப் படமும் மாளவிகாவின் நடிப்பும் கவனிக்கப்பட்டது. நடிகை நயன்தாராவின் சாயலை கொஞ்சம் கொண்டிருக்கிற மாளவிகா, இப்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பைக் ஓட்டும் வீடியா
இந்தப் படத்தை அடுத்து தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தியிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நடிகை மாளவிகா மோகனனுக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். இவர் கடந்த ஏப்ரல் மாதம், ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டும் வீடியாவை வெளியிட்டிருந்தார். அது வைரலானது.

பார்முலா ஒன் டிராக்
'பைக் ஓட்டுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். கடந்த வருடம் ஜூன் மாதம் நொய்டாவில் உள்ள, சர்வதேச பார்முலா ஒன் டிராக்கில், சிறந்த பைக் ரேஸர்களுடன் பைக் ஓட்டி சென்றேன். இதற்கு முன் வழக்கமான பைக்குகளையே ஓட்டி இருப்பதால் ரேஸ் பைக்கில் வேகமாக செல்ல முடியவில்லை' என்று தெரிவித்திருந்தார்.

ஜில்லான இமயமலை
இந்நிலையில் இப்போதும் தனது சமூக வலைதளப்பக்கத்தில், பைக்குடன் லடாக்கில் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள மாளவிகா, அங்கு பைக்கில் சுற்றிய அனுபவத்தைக் கூறியுள்ளார். அதில், 'கடந்த இரண்டு வருடங்களாக, பைக்கில் சுற்றுவதற்கு எனக்கு பிடித்த இடமாக ஜில்லான இமயமலை மாறியிருக்கிறது.

ஆலங்கட்டி மழை
கார், எப்போதும் சரியான தேர்வாக இருந்தாலும் பைக்கில் செல்லும் போது, ஜில்லிட வைக்கும் காற்றையும் சில நேரங்களிலும் ஆலங்கட்டி மழையையும் முகத்தில் தாங்குவது சிலிர்ப்பான அனுபவம். விரைவில் இயல்பு நிலை திரும்ப ஆவலுடன் காத்திருக்கிறேன். அப்போதுதானே அங்கு மீண்டும் செல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

சேர்ந்து போகலாம்
இதற்கு ஏராளமான நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகை அமலா பால், சேர்ந்து போகலாம் என்று கூறியுள்ளார். சில ரசிகர்கள், நாங்களும் வர்றோம் என்று தெரிவித்துள்ளனர். பலர் பார்த்து போங்க, ஹெல்மெட் முக்கியம், ஸ்டான்டை எடுத்துட்டு வண்டி ஓட்டுங்க என்று ஏராளமான கமென்ட்களை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











