கலாபவன் ஜோடியாக மாளவிகா

மலையாளத்தில் கலாபவன் கதாநாயகனாக நடிக்கும் மக்கொலி மணி என்ற படத்தில் தான் மாளவிகா அவருக்கு ஜோடி சேருகிறார்.
இப்போது வெறும் குத்தாட்டத்துக்கும், செகண்ட் ஹீரோயின் ரோல்களுக்கும், வில்லி கேரக்டர்களுக்கும் தான் மாளவிகாவை அழைக்கிறார்கள். அவரும் இந்த வாய்ப்புக்களை மறுக்காமல் ஏற்பதால் முன்பை விட பிஸியாக இருக்கிறார்.
இந் நிலையில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது (கலாபவன் மணிக்கு ஜோடி என்றாலும் கூட) மாளவிகாவுக்கே அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக உள்ளதாம்.
நிஸார் என்பவர் தான் மக்கொலி மணி படத்தை இயக்குகிறார். இது அவருக்கு 31வது படமாம்.
கடந்த 5 வருடங்களாக திரைப்படங்களை இயக்காமல் இருந்த நிஸார், சின்னத்திரையில் சீரியல்களை இயக்கி வந்தார். இப்போது மீண்டும் சினிமாவுக்குத் திரும்பி மாளவிகாவை இயக்கவுள்ளார்.
மிகக் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்தப் படத்துக்கு மாளவிகாவுக்கு மட்டுமே கொஞ்சம் பெரிய சம்பளம் பேசியிருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











