»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாளவிகா. நினைவு இருக்கிறதா?

கன்னடத்தில் இருந்து தமிழகம் வந்து கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்று ஆடி நமக்கெல்லாம் ரொம்பவேபிடித்துப் போனார்.

ஆனால், தமிழ் திடீரென ஓரம் கட்ட தெலுங்குக்குப் போய் தயாரிப்பாளரின் மகனுடன் கொஞ்ச நாள் லவ்பண்ணிவிட்டு பின்னர் அவரையும் விட்டுப் பிரிந்து கன்னடத்துக்கே போனார். அங்கு புதுமுக ஹ<ூரோக்களுடன்நடித்தார்.

இப்போது அங்கும் நோ சான்ஸ். இதனால் மும்பைக்குப் பறந்தார். அங்கு பாலிவுட் கேமராமேன்களை வைத்துதானே தனது கவர்ச்சிப் படங்களை எடுத்துக் குவித்து ஆல்பம் தயார் செய்தார்.

அதை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து ஊர் தயாரிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்து எப்படியும் நடிக்கத்தயார் என்று கூடவே லெட்டரும் வைத்து சான்ஸ் கேட்டார்.

குண்டக்க மண்டக்க போஸ்களில் இருந்து மாளவிகாவைப் பார்த்து ஜொள் விட்டதோடு நம்மவர்கள் ஒதுங்கிக்கொண்டனர்.

ஆனால், இந்த ஆல்பத்தைப் பார்க்க நேர்ந்த ஒரு பாலிவுட் பார்ட்டிக்கு மாளவிகாவைப் பிடித்துப்போய்விட்டது.

பல சூடான படங்களை எடுத்துள்ள மர்லான் ரோட்ரிக்ஸ் என்ற தயாரிப்பாளர் அடுத்து இத்தாலிய நடிகர்ரோமியோ என்பவரை வைத்து cu@9 (see you at nine) என்ற இந்தி-ஆங்கில கலப்புப் படம் ஒன்றை எடுக்கிறார்.

உன்னை 9 மணிக்கு சந்திக்கிறேன் என்ற அர்த்தம் வரும் இந்தப் படத்தில் மாளவிகாவையும் புக் செய்துள்ளார்ரோட்ரிக்ஸ்.

ரோமியோவும் இவரும் ஒரே வீட்டில் தங்கும் கதையாம் இது. அடல்ஸ் ஒன்லி படமான இதில் மாளவிகாவின் முழுஉடை களைப்பு சீன்களும் இருக்குமாம். ஏன் இப்படி ஆனார் மாளவிகா?

எல்லாம் பணம் சார்..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil